சென்னை, ஜூலை 1- சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச் சர்கள் தங்கம் தென்னரசு,
கோ.ரகுபதி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய தாவது:-
ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை நியாயமாக விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. செந்தில் பாலா ஜியை தனிமைப்படுத்தி குற்றம் சாட்டுவதற்கான அவசியம் என்ன? குற்றம்சாட்டப்பட்டதால் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய இயலாது. செந்தில் பாலாஜி மீதான நட வடிக்கைகளில் அரசியல் உள் நோக்கம் உள்ளது. அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநர் அதி காரம் தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத் தரவிட்டது.
ஒன்றிய அமைச்சர்கள் ஏராள மானோர் மீது வழக்குகள் நிலு வையில் உள்ளன. வழக்கு உள்ள ஒன்றிய அமைச்சர்கள் அனை வரும் நீக்கப்பட்டு விட்டார்களா? இல்லாத பூனையை இருட்டு வீட் டில் தேடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திமுக அரசு பிரச்சினைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டி யது இல்லை. செந்தில்பாலாஜி விவ காரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, அரசு முற்றி லுமாக நிராகரிக்கிறது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
No comments:
Post a Comment