இதற்கென்ன பதில்?
கேள்வி: பொருள் தெரியாமல் இறைவனின் பாடல்களையோ, மந்திரங்களையோ உச்சரிப்பது பாவமா?
பதில்: பாவம் இல்லை. அய்ம்பது பவுனில் ஒரு தங்க ஆபரணம் வைத்திருக்கிறோம்; தங்கத்தின் தராதரம் பற்றியோ அல்லது தங்க ஆபரணத்தின் மதிப்பு பற்றியோ நமக்குத் தெரியாது. இருந்தாலும் வைத்திருக்கின்றோம். தேவைப்படும்போது தங்கத்தின் தராதரம் அறிந்தவரிடம் அந்த ஆபரணத்தைத் தந்து நம் குறைகளை தீர்த்துக் கொள்கிறோம் அல்லவா! இதுதான் பதில்.
அர்ச்சனை செய்யும் ஆசாமிகளுக்கே அர்த்தம் தெரியவில்லையே! வேறு யாரிடம் சென்று கேட்பது? 108 வைணவ கோவில்களில் வெறும் முப்பது கோயில்களில் உள்ள அர்ச்சர்களுக்குத்தான் ஆகமங்கள் தெரிந்திருக்கின்றன என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்திருக்கிறார்களே, இதற்கு என்ன பதில்?
No comments:
Post a Comment