இதுதான் நீட் தேர்வின் யோக்கியதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

இதுதான் நீட் தேர்வின் யோக்கியதை!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மோசடி ரூ.7 லட்சம் கைமாற்றல் ஆசாமி கைது

புதுடில்லி, ஜூலை.5- ரூ.7 லட்சம் கூலிக்கு மாணவர்களை அமர்த்தி, நீட் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை அரங்கேற்றிய கும்ப லின் தலைவனை டில்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட சில மருத்துவப் படிப்புகளில் சேர்வ தற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களே இந்த தேர்வில் வெற்றி பெறமுடியாமல் திணறு கின்றனர்.

இதனால் சிலர் இந்த தேர்வில் வெற்றி பெற குறுக்கு வழிகள் சில வற்றை பின்பற்றுகிறார்கள். அதில் ஆள் மாறாட்டமும் ஒன்று. நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கிறவர் தனக்கு பதிலாக வேறு ஒரு வரை நியமித்து அவரை தேர்வு எழுதச் செய்வதே இந்த ஆள்மாறாட்டம். மாணவர்கள் பிடிபட்டனர் சமீபத் தில் நடைபெற்ற நீட் தேர்விலும் இதுபோன்ற மோசடி நடந்துள் ளது. டில்லி எய்ம்ஸ் மாணவர்கள் இந்த ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. 

சமீபத்தில் தேர்வு நடை பெற்றபோது டில்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் பி. எஸ்சி. கதிரியக்கவியல் முதலாமாண்டு மாணவர் சஞ்சு யாதவ் டில்லியில் கையும், களவுமாக பிடிபட்டார். இதைப்போல மகாவீர், ஜிதேந்திரா ஆகிய மாணவர் கள் நாக்பூரில் தேர்வு எழுதும் போது பிடிபட்ட னர்.

இவர்களிடம் நடத்திய விசார ணையில் இந்த ஆள் மாறாட்ட மோசடிக்கு தலைமையாக செயல் பட்டது டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 2ஆம் ஆண்டு கதிரி யக்கவியல் துறை மாணவர் நரேஷ் பிஷ்ராய் என்பது தெரிய வந்தது. அவரை டில்லி ஆர்.கே.புரம் காவல் துறையினர் நேற்று (4.7.2023) கைது செய்தனர். 

இவரிடம் நடத்திய விசாரணை யில் பல்வேறு தகவல்கள் கிடைத் தன. ஆள் மாறாட்டம் செய்வதற் கான அனைத்து முன்னேற்பாடு வேலைகளையும் நரேஷ் பிஷ்ராயே கவனித்துள்ளார்.

இதற்காக தன்னை அணுகுகி றவர்களிடம் பெரும் தொகையை கறந்து விடுவார். அந்த தொகையில் இருந்து, ஆள் மாறாட்டத்துக்கு துணை வரும் சக மாணவர்களுக்கு ரூ.7 லட்சம் பேரம் பேசி, ஒரு லட்ச ரூபாய் முன் பணமாக கொடுத்து தேர்வு எழுத வைத்துள்ளார். முத லாமாண்டு மாணவர்கள் ஆள் மாறாட்டத்துக்கு இவர் பயன்படுத் திய மாணவர்கள் அனைவருமே கதிரியக்கவியல்துறை முதலா மாண்டு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த முறைகேட்டில் இவ ரோடு சேர்த்து தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இன்னும் பலர் சிக்குவார்கள் என காவல்துறை தெரிவித்து உள்ளனர். முறைகேட்டில் மாணவர்கள் மட்டு மின்றி மருத்துவ அதிகாரிகளுக்கும் கூட தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் இருந்து மடிக் கணினி, செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதில், முறைகேடு தொடர்பாக ஏதேனும் உள்ளனவா? என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment