சென்னை, ஜூலை 6 அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததாக தொட ரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக் கும் 3-ஆவது நீதிபதியாக சி.வி.கார்த்திகே யனை நியமித்து தலைமை நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந் தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய் யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று முன்தினம் (4.1.2023) அவர்கள் இருவரும் பிறப்பித்தனர். அப் போது நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். நீதிபதி ஜெ.நிஷா பானு, அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம். அவரை உடனே நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.
ஆனால் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ''செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாள்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும்'' என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் இதையடுத்து இந்த வழக்கை 3-ஆவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று (வியாழக் கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கிறார்.
சென்னை - அண்ணா மேம்பாலம் அருகே
தோட்டக் கலைதுறைக்குச் சொந்தமான
ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் அரசு கையகப்படுத்தியது செல்லும்!
அ.தி.மு.க. பிரமுகரின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
சென்னை, ஜூலை 6- சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதிட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி தோட் டக்கலைச் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார்.
இதை மீட்க கடந்த 1989ஆம் ஆண்டே அரசு எடுத்தது. அரசு நடவடிக்கைக்கு எதி ராக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த நிலம் அர சுக்குச் சொந்தமா னது என உறுதி செய்தது.
அந்த இடத்தில் தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழிபூங்கா அமைக்கப்பட்டது. செம்மொழி பூங்காவுக்கு எதிரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6 புள்ளி 36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலை யில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அந்த இடத்தை கையகப்படுத்தி தோட்டக்கலைத்துறை வசம் ஒப்படைத்துவிட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு 3.7.2023 அன்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ரவீந்திரன், மற்றும் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அரசு நிலத்தை கையகப்படுத்தப்பட்ட நடவடிக் கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்தியாவில் புதிதாக
56 பேருக்கு கரோனா
புதுடில்லி, ஜூலை 6 இந்தியாவில் 4.7.2023 அன்று வெறும் 26 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நேற்று (5.7.2023) அது இருமடங்காக உயர்ந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளான வர்களின் எண்ணிக்கை 4,49,94,407 ஆக உயர்ந்தது. நேற்று கரோனா தொற்றால் மராட்டிய மாநிலம் மற்றும் கேரளாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதனால் கரோனா தொற்று பலி எண்ணிக்கை 5,31,910 ஆக அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக இருந்தது.
No comments:
Post a Comment