இதுதான் இந்துத்துவா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 13, 2023

இதுதான் இந்துத்துவா!

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர் இறைச்சி விற்கக் கூடாதாம்

புதுடில்லி, ஜூலை 13  நாட்டின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட் டோர்கள் இறைச்சி விற்கக்கூடாது என்ற பிரச்சாரத் துடன் இந்துத்துவா கும்பல்கள் கடைகளை இழுத்து மூடிவரு கின்றனர். மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்கள், தாழ்த் தப்பட்ட சமூக  மக்கள் மீதான வன்முறைச் சம்ப வங்கள் மிகமோசமான அளவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின் றன. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டில்லி, பீகார் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள், தாழ்த்தப் பட்ட சமூக மக்கள் நடத்தி வரும் சிறிய அளவிலான இறைச்சிக் கடைகளை இந்துத்துவா கும்பல்கள் மூடி வருகின்றன.

உத்தரப்பிரதேசம் : பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் மாநிலத் தின் பரேலி நகரில் தீவிர இந்துத் துவா அமைப்பான ராஷ்டிரிய பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இறை ச்சிக் கடைகளில் சோதனை நடத்தி, அவற்றை மூடுமாறு மிரட்டியுள் ளனர். 

மத்தியப் பிரதேசம் : பாஜக ஆளும் மற்றொரு மாநில மான மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரில் உள்ள அரசுக்கு ஆதரவான உள்ளூர் அதிகாரிகள், இந்து பக்தர் களின் உணர்வுகளை புண்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறி முஸ்லிம் இறைச்சிக் கடைகளை மூட முயன்றனர். 

டில்லி : நாட்டின் தலைநகர் டில்லியின் நஜப்கர் பகுதியில் விஷ்வ ஹிந்து  பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் குண்டர்கள், முஸ்லிம்கள் நடத்தி வரும் பல இறைச்சிக் கடைகளுக்குச் சென்று இந்துக்களின் உணர்வுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும், செவ்வாய்க்கிழமை களில் இறைச் சிக் கடைகளை கட்டாயமாக மூட வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பீகார்: பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் பகுதி யில் பஜ்ரங் தள் குண்டர்கள் முஸ்லிம், தாழ்த்தப் பட்ட சமூக மக்கள் நடத்தி வந்த சிறிய அள விலான இறைச்சிக் கடையை வலுக் கட்டாயமாக மூடிவிட்டு, மேலும் கோவில்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு அருகில் இனி யாரும் இறைச்சிக் கடைகளையும் திறக்கக் கூடாது என மிரட்டல் விடுத்துள் ளனர்.  மேற்குறிப்பிட்ட 4 பகுதிகளில் நடந்த சம்பவங்கள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவாகியதன் அடிப்படையிலேயே வெளியே  கசிந் துள்ளன. இன்னும் வெளியுலகிற்கு தெரியாமல் உள்ள நிகழ்வுகள் எத்தனையோ?


No comments:

Post a Comment