அடாவடி ஆளுநர்: சட்ட நிபுணர்கள் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

அடாவடி ஆளுநர்: சட்ட நிபுணர்கள் கருத்து

புதுடில்லி, ஜூலை 1 அமைச்சர் செந்தில் பாலா ஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி 29.6.2023 அன்று அறிவித்தார். அதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அம்முடிவை நிறுத்தி வைப்பதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள தாகவும் கூறினார். இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். 

ஒன்றிய அரசின் மேனாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கூறியதாவது:-

ஒரு அமைச்சரை தன்னிச்சையாக நீக்க ஆளு நருக்கு அதிகாரம் இல்லை. அவர் தனது அதிகார வரம்பை மீறி இருக்கிறார். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்று அவர் எப்படி முடிவு செய்ய முடியும்? அமைச்சர வையின் அறிவுரைப்படிதான் அவர் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்பது 1994 ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வில் முடிவான விஷயம். ஒரு அமைச்சரை நீக்குமாறு அவர் யோசனை கூறலாம்.

ஆனால், அமைச்சரவையின் ஆலோசனைப் படிதான் அவர் செயல்பட வேண்டும். ஒரு அமைச் சரை நீக்கும் முடிவு, ஆளுநரின் பெயரில்தான் எடுக்கப்படும். இருப்பினும் அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மூத்த வழக்குரைஞர் கூறியதாவது:-

கடந்த 1974 ஆம் ஆண்டு, ஷாம்ஷெர் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் இதுபோன்ற விவகாரங்களில் சொந்தமாக செயல்பட முடியாது. குடியரசுத்தலைவர் ஆளுநர் ஆகியோரின் அதிகாரம் குறித்து ஷாம்ஷெர்சிங் வழக்கு வரையறுக்கிறது.

ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு சுதந்திர மான அதிகாரம் கிடையாது. அப்படி அதிகாரம் இருந்தால், நாளை ஒட்டுமொத்த அரசையும் நீக்குவதாக அவர் சொல்லி விடுவார். பின்னர், கூட்டாட்சி முறையே சீர்குலைந்து விடும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment