கோட்டச்சேரியில் வைக்கம் நூற்றாண்டு விழா - தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

கோட்டச்சேரியில் வைக்கம் நூற்றாண்டு விழா - தெருமுனைக் கூட்டம்

பாபநாசம், ஜூலை 25 - பாப நாசம் ஒன்றியம் கோட் டச்சேரியில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க தெருமுனை கூட் டம் 22.07.2023 மாலை நடைபெற்றது. குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம் தலைமை ஏற்றார்.

தோழர் சு விஜயகுமார் முன்னிலை ஏற்றார். கஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். தலை மைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி துவக்க உரையாற்றினர். கழக சொற்பெருக்காளர் இராம. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

குடந்தை கழக மாவட்ட தலைவர் வழக் குரைஞர் கு. நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு, பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம், ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் து.சரவணன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி. பெரியார் கண்ணன் ஒன்றிய அமைப்பாளர் கை.ராஜராஜன், பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர் கோவி.ராஜீவ் காந்தி, உம்பளா பாடி கழகத்தின் அமைப்பாளர்  சா. வரதராஜன், ஒன்றிய துணை செயலாளர் க. ஜனார்த்தனன், பாபநாசம் நகர திராவிடர் கழக துணை செய லாளர் வி.மதிவாணன், கபிஸ்தலம் கழக அமைப்பாளர் ஏ. கைலாசம், இராஜகிரி கழக செயலாளர் சூ. கலியமூர்த்தி, பாபநாசம் நகர தலைவர் வெ. இளங்கோவன் பகுத் தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் மு.சேகர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர், உள்ளிக்கடை குணசேகரன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

பாபநாசம் ஒன்றியத் தில் தொடர்ந்து 11 நாட்களில் ஒன்பது கூட்டங்களை மிகவும் சிறப்பாக நடத்திய கழக முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் தெருமுனைக் கூட்டத்தினுடைய  தலைவர் ஆகியோருக்கு ஒன்றிய கழக சார்பில் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

கோட்டுச்சேரி கிராமத்தைச்சார்ந்த  தோழர் கள் க. சந்துரு, நடராஜன், லட்சுமணன்,  விஜய குமார், கருப்பையன் ஆகியோர் சிறப்பு செய்யப் பட்டனர்.

No comments:

Post a Comment