புதுடில்லி, ஜூலை, 21 குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக் கியதாக புனையப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல் வாத்துக்கு பிணை வழங்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2002இல் குஜராத் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் - _ பாஜக நடத்திய பயங்கர கலவரம் - இனப் படுகொலையில் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 2000-க்கும் அதிகமான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக வழக்கு விசாரணை யில் அப்போதைய குஜராத் முதல மைச்சரும், தற்போதைய பிரதமரு மான நரேந்திர மோடி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சிறப்பு புலனாய்வுக்குழு விசார ணையில் மோடி உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என்று கூறி வழக் கிலிருந்து அவர்களை விடுவித்தது.
இதனை எதிர்த்து, கொல்லப் பட்ட காங்கிரஸ் எம்.பி., ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத் இருவரும் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விடுவித்தது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து, குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதா ரங்கள், சாட்சிகளை உருவாக்கிய தாகவும், மாநில அரசு மீது அவ தூறு களை பரப்ப அரசியல்வாதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த அகமது படேலிடம் இருந்து டீஸ்டா செதல்வாத் ரூ.30 லட்சம் பெற்றதாகவும், திட்ட மிட்டு வழக்குகள் புனையப்பட்டு கடந்தாண்டு கைது செய்யப்பட் டார். டீஸ்டா செதல்வாத் கைது நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக கட்சிகள் டீஸ்டா செதல்வாத் கைதுக்கு கடும் கண்ட னம் தெரிவித்தனர். மேலும் அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவரும் டீஸ்டா செதல்வாத் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந் நிலையில், பிணை கோரி டீஸ்டா செதல்வாத் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், கடந்த செப் டம்பரில் உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி, பிணை மனுவை உயர் நீதிமன்ற பரிசீலனைக்கே விட்டு விடுவதாகவும், அதுவரை டீஸ்டா பிணையில் இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.
டீஸ்டா செதல்வாத் பிணை விவகாரம் குஜராத் உயர்நீதி மன்றத்தின் நீதிபதி நிர்சார் தேசாய் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், குஜராத் மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், டீஸ்டாவுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டீஸ்டா வுக்கு பிணை வழங்கினால் அவர் வழக்கின் முக்கிய ஆதாரங்களை சிதைத்துவிடுவார் என்றும் குஜராத் அரசுத் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. கடந்த மாதம் 21 அன்று விசாரணையை முடித்து, ஜூலை 1 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி டீஸ்டாவின் பிணை மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மேலும், டீஸ்டா உடனடியாக சரண டைய வேண்டும் என்றும்உத்தரவிட்டார். பிணை மனு தள்ளுபடி உத்தர வை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று டீஸ்டாவின் வழக்குரைஞர் மிஹிர் தாக்கூர் வலி யுறுத்தியிருந்தார். ஆனால், நீதி மன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. உடனடியாக இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டீஸ்டா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டு மனு நீதி பதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா, தீபங்கர் தத்தா ஆகி யோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. மனுவை விசா ரித்த நீதிபதிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் வக்கிரமானவை மற்றும் முரண் பாடானவை என்று கூறி டீஸ்டா செதல்வாத் பிணையை உறுதி செய்து, டீஸ்டாவுக்கு வழங்கப் பட்ட காவல்துறை பாதுகாப்பு நீடிக்கப் படும் என்றும், அவரது கடவுச்சீட்டு காவல்துறை வசம் இருக்கும் என்றும், டீஸ்டா செதல் வாத் சாட்சியங்களிடம் தொடர்பில் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment