திறக்காத திருவாய்கள் இப்பொழுது திறப்பது - ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

திறக்காத திருவாய்கள் இப்பொழுது திறப்பது - ஏன்?

மணிப்பூர் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி கருத்து தெரிவித்ததும் சமூகவலை தளங்களில் பாஜக மற்றும் ஹிந் துத்துவா அமைப்பினர் தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

''தலைமை நீதிபதி அனை வருக் குமான நீதிபதியாக இருக்க வேண்டும்.   அரசியல் பிரச்சினைகளின் கருத்து கூறக்கூடாது. எதிர்கட்சிகளில் குர லோடு இவரது குரலும் மோடிக்கு எதிராக உள்ளது'' என்று விமர்சித்து வருகின்றனர்.  

அதில் சபாபதி மிஸ்ரா என்ற பார்ப்பனர் எழுதிய பதிவு மிகவும் மோசமானது.  அவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாற்றுத் திறனாளி மகள்களின் படத்தைப் போட்டு ''தேவையில்லாமல் மோடிக்கு எதிராக கருத்து சொல்வதால்தான் உனக்கு இப்படி பிள்ளைகள் பிறந்திருக்கின்றன'' என்று பதிவிட்டுள்ளார். 

  உண்மை என்னவென்றால் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரால் கைவிடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இது தெரியாமல் ஹிந்துத்துவா அமைப்பினரும், பா.ஜ.க.வினரும் மடத்தனமாக கேவலமாக, அவரை வசைபாடி வருகின்றனர்.

ஆளுநர் அரசியல் பேசினால் இந்தக் கூட்டத்துக்கு லட்டு சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. தானாகவே முன்வந்து விசாரிக்கும் உரிமை உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றத்துக்கு உண்டு என்பதற்கு இதற்குமுன் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அப்பொழுதெல்லாம் திறக்காத இந்தத் 'திருவாய்கள்' இப்பொழுது திறப்பது ஏன்? ஏன்??

No comments:

Post a Comment