‘‘சீக்கியர்களின் பொற் கோவில் இருக்கும் அமிர் தசரஸ் நகரத்தில் கண் டோன்மெண்ட் போர்டு நிர்வாகம், ‘கருணைச் சுவர்' என்று ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. ஊரின் பிரதான பகுதியில் இருக் கும் இந்த அறையில் மக்கள் தாங்கள் பயன்படுத் தாத, ஆனால், பிறருக்குப் பயன்படக் கூடிய துணி மணிகளைக் கொண்டு வந்து வைத்து விடுகிறார் கள். ஏழை மக்கள், அங்கே வந்து தங்களுக்குத் தேவையான உடைகளை எடுத்துச் செல்கிறார்கள். சமீபகாலமாக, தினசரி உடைகள் மட்டுமில்லாமல், செருப்பு, குளிர்கால உடை கள், இதர பொருட்களை யும் மக்கள் இங்கே கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். தேவை யானவர்கள் எடுத்துச் சென்று பயனடைகிறார் கள்!''
‘ராணி', 9.7.2023, பக்கம் 33
இப்படியொரு செய்தி வெளிவந்துள்ளது. அதுவும் கோவில்தான் - அதுவும் சீக்கியர்களின் பொற்கோவில்!
அந்தக் கோவிலில் ஏழை - பாழைகள் பயனடைய இப்படியொரு ஏற்பாட்டைச் செய்துள்ளார்கள்.
இதைப் போன்ற நடவடிக் கையை ஹிந்துக் கோவிலில் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியுமா?
கேட்டால் என்ன சொல் லுவார்கள்? ‘அவா அவா தலையெழுத்து - கர்மப் பலன் - அதனை அனுபவித்து தான் தீரவேண்டும்' என்று ஒரே வரியில் பதில் சொல்லி நழுவி விடுவார்கள்.
‘‘கர்மா அல்லது வினைப் பயன் என்பது ஒருவரின் தற் போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல் களின் கூட்டுத் தொகையாகும். இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது.''
என்பது கர்மா பற்றிய ஹிந்து மதத்தின் பார்வை யாகும்.
சீக்கியர்களின் மதம், சீக்கியர்களின் பொற்கோவி லில் நிரம்பித் ததும்பும் மனித நேயத்திற்கும், இந்த அர்த்த முள்ள(?) ஹிந்து மதத்திற்கும் இடையில் உள்ள வேறு பாட்டை புத்தியுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண் டாமா?
இதில் கொடுமை என்ன வென்றால், சீக்கியத்தை ஹிந்து மதத்துக்குள் அடக்கி யதுதான்.
சட்டப்பிரிவு 25
Conversion and Reconversion to Hinduism:
Under the codified Hindu law, any person if converted to Hinduism, Buddhism, Jainism or Sikhism can be called as a Hindu. From the case of Perumal vs poonuswami, we can say that a person can be called a Hindu by conversion.
மதச்சார்பற்ற நடவடிக் கையையும் ஒழுங்குபடுத்து கிறது மற்றும் கட்டுப்படுத்து கிறது.
இந்த விதியின் கீழ், சீக்கியர், ஜெயின் அல்லது பவுத்த மதங்களைச் சார்ந்தவர்கள் ஹிந்து மதத்திற்குள் உள்ளடக் கியதாகக் கருதப்படுவார்கள்.
எப்படி இருக்கிறது?
- மயிலாடன்
No comments:
Post a Comment