கவுரவ விரிவுரையாளர் ஊதியம் உயர்வு: அமைச்சர் க.பொன்முடி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 22, 2023

கவுரவ விரிவுரையாளர் ஊதியம் உயர்வு: அமைச்சர் க.பொன்முடி தகவல்

சென்னை ஜூலை 22 - அரசுக் கல்லூரி களில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு பொது பாடத் திட்டத்தைக் கொண்டுவர உயர்கல்வித் துறை முடிவு செய் துள்ளது. இதற்கு கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய பாடத் திட்டம் தொடர்பான ஆலோ சனைக் கூட்டம், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் நேற்று  (21.7.2023)  நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச் சர் க.பொன்முடி தலைமை வகித் தார். துறைச் செயலர் ஏ.கார்த்திக் முன்னிலை வகித்தார்.

அண்ணா பல்கலை. துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், சென்னை பல்கலை. துணைவேந்தர் எஸ்.கவுரி, மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் குமார் உட்பட மாநிலப் பல்கலை. துணை வேந்தர் கள், பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், பல்கலை.களில் பொதுப் பாடத் திட்டத்தை அமல்படுத் துவது, மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழாவுக்கான நிகழ்ச்சிகள், காலி பணியிடங்களை நிரப்புவது குறித்தெல்லாம் விவாதிக்கப் பட்டது. பின்னர், அமைச்சர் க.பொன் முடி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

மேனாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்கலை., கல்லூரிகளில் பேச்சு, கட்டுரை, விநாடி_-வினா, கவி தைப் போட்டி கள் நடத்தப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் 100 சதவீத பாடத் திட்டம் ஒரே வடிவில் இருக்கும். மற்ற பாடங் களில் 75 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்கும். மீதமுள்ள 25 சதவீத பாடங் களை, பல்கலை.கள் தங்களின் பாட வாரியக் குழுவின் மூலம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது. 

இதற்கான பாடத் திட்டம் ஒரு மாதத்துக்கு முன்பு இறுதிசெய்து, பல்கலை.களுக்கு அனுப்பப்பட்டு விட் டது. சில இடங்களில் புதிய படிப்புகள் கொண்டு வரப்பட் டுள்ளன. அந்த படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்த ஆண்டு முதல் நடை முறைப் படுத்தப்பட்டுள்ள பொதுப் பாடத் திட்டத்தால், பல்கலை. அதிகாரம் பாதிக்கப்படாது. அவர்களுடன் ஆலோசித் துதான், புதிய பாடத் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு மாறும் மாணவர்களுக்கும் பாடத் திட்டங்கள் எளி தாக இருக்கும். இதை அனைத்து பல்கலை. துணை வேந்தர்களும் ஏற்றுள்ளனர்.

பொதுப் பாடத் திட்டம் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையிலும், எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.  பல்கலை.களில் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

விரைவில் தகுதியானவர்களை நிரந் தரமாக நியமிக்க உள்ளோம். அனைத்து பல்கலை.களிலும் ஒரே மாதிரியான பணிநியமன முறையை கொண்டுவரும் வகையில், துணைவேந் தர்கள் தலை மையில் தனிக் குழு அமைக்கப்பட உள்ளது. 

அதேபோல, பேராசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப் படும்.

கவுரவ விரிவுரையாளர்களுக் கான ஊதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து, ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. பொதுப் பாடத்திட்டங்கள் நடப்பாண்டில் முதலாண்டு மாணவர் களுக்கு  அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து  படிப்படியாக நடைமுறைக்கு வரும்.

காலத்துக்கேற்ப பாடத் திட் டங்கள் மாற்றப்பட வேண்டும். இதில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்ப்புத் தெரி விக்கும் தன் னாட்சிக் கல்லூரிகளையும் அழைத் துப் பேசுவோம். அனைத்து பல்கலை.களிலும் ஒரே பாடத் திட்டம் அமல் படுத்தப்படுவதால், ஒரே மாதிரி யான தேர்வுமுறை, தேர்வுக் கட் டணம் அறிமுகப்படுத்தப்படும். 

இதுதவிர, அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரி யர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் சமமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆகஸ்ட் மாதம் ஆலோசிக்கப்படும். நடப்பாண்டு `ஸ்லெட்' தேர்வை நடத்துவதற்கான பணிகள் தற் போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

No comments:

Post a Comment