வகுப்புவாத சக்திகள் நமக்கு எதிரிகள் - அவர்களை வீழ்த்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

வகுப்புவாத சக்திகள் நமக்கு எதிரிகள் - அவர்களை வீழ்த்த வேண்டும்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

மும்பை, ஜூலை 5- மராட்டிய மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்பு வாதப் பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியது அவசியம் என தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

மராட்டிய மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் பிளவை ஏற்படுத்தியுள்ள நிலையில், கராட் பகுதியில் அமைந் துள்ள மாநிலத்தின் முதலாவது முதலமைச்சரும், தன் அரசியல் குருவுமான யஷ்வந்த்ராவ் சவானின் நினைவிடத்தில் சரத்பவார் நேற்றுமுன்தினம் (3.7.2023) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து தேசியவாத காங் கிரஸ் கட்சியின் தொண்டர்களிட மும் ஆதரவாளர்களிடமும் சரத் பவார் கூறியதாவது:

கட்சிகளைப் பிளவுபடுத்துவ தற்கான பாஜகவின் தந்திரத்துக்கு நம் தலைவர்கள் சிலர் இரையாகி விட்டனர். மாநிலத்திலும் நாட்டி லும் வகுப்புவாதப் பிரிவினை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் அத்தகைய சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியது அவசியமாக உள்ளது.

மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசையும் பாஜக கவிழ்த்தது. இதுபோன்ற செயல் களை மராட்டிய மாநிலத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களி லும் பாஜக செய்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான அரசை இதே போல பாஜக கவிழ்த்தது. அதற்குப் பதிலாக வகுப்புவாதத்தை ஆதரிக் கும் பாஜக அரசு அங்கு ஆட்சி யமைத்தது.

நாட்டின் ஜனநாயகத்தையும் நாம் காக்க வேண்டும். மற்ற கட்சி களை ஜனநாயகத்துக்கு எதிராகப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு ஜோதிபா ஃபுலே, அம்பேத்கர் பிறந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அடுத்த சில மாதங்களில் அத்தகைய சக்திகளை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அப் போது மக்களின் ஆதரவுடன் ஜன நாயகக் கொள்கைகள் மீண்டும் நிலைநாட்டப்படும் என்றார் அவர்.

அஜித் பவாரை ஆதரிக்கவில்லை

மாநிலத்தின் சதாரா பகுதியில் சரத் பவார் செய்தியாளர்களிடம் நேற்றுமுன்தினம் (3.7.2023)கூறு கையில், ‘‘எனது ஆதரவுடனேயே அஜித்பவார் மாநில அரசில் இணைந்ததாகக் கூறுவது அபத்த மானது. இழிவான எண்ணத்தைக் கொண்டுள்ளோரே இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பர்.

அஜித்பவார் உள்ளிட்டோர் செய்தது சரியல்ல. ஆனால், மற்றவர் களை மோசமாக விமர்சிக்கும் அரசியலை ஒருபோதும் முன்னெ டுக்க மாட்டேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரின் செயல்பாடுகளுக்காகத் தொண்டர்களும் ஆதரவாளர் களும் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது. கட்சியை வலுப்படுத்துவதற் காகவும், தொண்டர்களை ஒன்று திரட்டுவதற்காகவும் மாநிலம் முழு வதும் பயணம் மேற்கொள்ள வுள்ளேன்.

மகா விகாஸ் அகாடி கூட்டணி யில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் காங்கிரஸ் தற்போது அதிக எண் ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதனால், மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அக்கட்சி கோருவதில் எந்தத் தவறும் இல்லை’’ என்றார்.

புனே நகரில் இருந்து கராட் நகருக்குச் சென்ற சரத் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர் களும் வழிநெடுகிலும் நின்று வர வேற்றனர். கராட் பகுதிக்குச் சென்ற டைந்த சரத் பவாரை ஆயிரக்கணக் கான கட்சித் தொண்டர்கள் திர ளாகக் கூடி வரவேற்றனர்.


No comments:

Post a Comment