உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை மற்றும் சமையலறையை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு.
மழைக்கு வாய்ப்பு
ஒடிசா மாநிலம் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழ் நாட்டில் 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது.
மாற்றம்
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப் பாதை, 4ஆவது முறையாக வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்.
நீக்கம்
ரூ.10,000 அபராதம் விதிக்காமல் இருக்க மது போதை வாகன ஓட்டியிடம் ரூ.4,000 லஞ்சம் கேட்ட சென்னை மெரினா காவல் நிலைய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடாது...
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கெனவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தீர்ப்பு
பஞ்சாயத்து சட்டத்தின்படி பட்டா நிலத்தை ‘மயானமாக’ப் பயன்படுத்த முடியாது என்றும், ‘மயானம்‘ என அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்து உள்ளது.
முடியாதாம்!
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சிறப்பு சுற்றில் இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராத மாணவர்கள், ஓராண்டுக்கு ‘நீட்’ தேர்வு எழுத முடியாது என மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு
மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆன நிலையில், அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கப் படுகிறது.
No comments:
Post a Comment