வடக்குத்து, ஜூலை 1- சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம் என்பதை வலியுறுத்தி வடலூரில் வரும் ஜூலை 7ஆம் தேதி மாபெரும் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் திறந்த வெளி மாநாடு கழ கத் தலைவர் ஆசிரியரின் ஆலோசனையின்படி ஏற்பாடாகி வருகிறது.
அதற்கான களப் பணிகளை ஊக்குவிக்கக் கூடிய வகையில் கலந்து ரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின் றன. கடலூர் மாவட்ட கழக நிர்வாகிகளின் கலந் துரையாடல் கூட்டம் வடக்குத்து, அண்ணா கிராமம் பெரியார் படிப் பகத்தில் 23.6.2023 அன்று மாலை 6:00 மணி முதல் 8 மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்றது.
கடலூரில் நடைபெற வுள்ள வள்ளலார் விழாவை சிறப்பாக நடத்துவது, நடத்துவோருக்கு உதவு வது என்று நிர்வாகிகள் கருத்துரை ஆற்றினர். மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணி வேல், மாநில இளை ஞரணி துணைச் செயலா ளர் வேலு, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட இணை செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக தலை வர் மாணிக்கவேல், பகுத் தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன், ஒன்றிய செயலாளர் செந்தில் வேல், இந்திரா நகர் கிளை தலைவர் பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் நூலகர் கண் ணன் நன்றி கூறினார்.
மருவாய் கிராமத்தில் நடைபெற்ற படத் திறப்பை ஒட்டி வருகை தந்த கழகத் தோழர்களு டன் வடலூர் வள்ளலார் விழா குறித்து பேசப்பட் டது. பெருமளவில் தோழர்கள் குடும்பம் குடும்பமாக நிகழ்வில் பங் கேற்கச் செய்ய வேண்டும், முனைப்புடன் நிகழ்வு பற்றிய விளம்பரங்களை ஆங்காங்கு தோழர்கள் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டது. கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் மாவட்ட கழக நிர்வாகிகள் தண்ட பாணி, எழில் ஏந்தி, வெற்றிச்செல்வன், சிவ குமார், யாழ் திலீபன், புல வர் ராவணன், குணசேக ரன், மணிவேல், தர்மலிங் கம், மனக்குப்பம் தர்மன், மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடலூர் நகரக் கழக கலந்துரையாடல் கூட் டம் 26.6.2023 அன்று காலை 10 மணி அளவில் பெரியார் இல்லத்தில் நடை பெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், வட லூர் கழக தலைவர் புல வர் ராவ ணன், அமைப்பா ளர் முருகன், ஒன்றிய கழக அமைப்பாளர் சேகர் ,இளைஞர் அணி நிர் வாகி மோகன், இந்திரஜித் ஆகியோர் ஜூலை 7ஆம் தேதி வடலூரில் நடக்க வுள்ள வள்ளலார் விழாவை சீரும் சிறப்புமாக நடத்து வது என்று முடிவு செய் யப்பட்டது. முருகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment