எங்கள் மகள் கியூபா படிக்கும் பள்ளியில் இன்று சைக்கிள் கொடுத்தார்கள். மாணவர்கள், பெற்றோர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!
இரு சக்கர வாகனங்களில் தூக்கிக் கொண்டும், பெரிய வண்டிகளில் ஏற்றிக் கொண்டும், சிலர் ஓட்டிக் கொண்டுமாக பறக்கிறார்கள்!
புத்தகம் தருகிறோம்,
அதை வைக்கப் பை தருகிறோம்,
செருப்பு தருகிறோம்,
இலவச பஸ் பாஸ் தருகிறோம்,
கல்விக் கட்டணச் சலுகை தருகிறோம், உயர் கல்விக்குக் கடன் தருகிறோம்,
லேப் டாப் தருகிறோம்,
உணவு தருகிறோம்...
எப்படியாவது படித்து விடுங்கள், படித்து விடுங்கள் என நூற்றாண்டு காலமாக "டார்ச்சர்" செய்வதே திராவிடர் இயக்கத்திற்கு வேலையாகிப் போனது!
- வி.சி.வில்வம் (முகநூல் பதிவு)
No comments:
Post a Comment