ஒன்றிய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்
சென்னை,ஜூலை18-அமைச்சர் க.பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை, பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை திசைதிருப் பும் முயற்சியாகும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக் கோடு, பாஜக அரசு அமலாக்கத் துறையை ஏவிவிட்டு, கைது செய் தது. தற்போது அமைச்சர் க.பொன் முடி மீது குறிவைத்துள்ளது. இந்தி யாவில் உள்ள எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தவும், பழிவாங்கவும் அம லாக்கத் துறை, வருமான வரித் துறை, ஒன்றிய புலனாய்வுத் துறை ஆகியவற்றை பாஜக பயன்படுத்தி வருகிறது.
பாஜகவை எதிர்த்து சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க் கட்சிகளின் மாநாட்டில் 17 கட்சி கள் பங்கேற்றன. இன்றைக்கு 25 கட்சிகள் பெங்களூருவில் கூடியுள் ளன. எதிர்க்கட்சிகளுடைய ஒற்று மையை சகித்துக் கொள்ள முடி யாத பாஜக இவ்வாறு அடக்கு முறையை ஏவிவிட்டிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆயுதமாக அமலாக்கத் துறையை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. சமீ பத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மீதும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட் டத்தில் இருந்து மக்களின் கவ னத்தை திசைதிருப்பவே அமலாக் கத் துறையை மலிவான செயலுக்கு ஒன்றிய அரசு பயன்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
2011_-2012ஆம் ஆண்டுகளில் க.பொன்முடி மேல் போடப்பட்ட வழக்கின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அமலாக்கத் துறை மூக்கை நுழைத்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே திமுக அமைச்சர்கள் குறித்த ஒரு களங் கத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். பா.ஜ.க.வின் இந்த முயற்சி வெற்றி பெறாது. எதிர்க்கட்சி தலைவர் களின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் நிலையில், அதை திசைதிருப்பும் நோக்கத்தில் திட்ட மிட்டே இந்த சோதனை நடத்தப் படுகிறது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையின் வாயிலாக மிரட்டி, ஆட்சியாளர் களைப் பணிய வைக்கலாம் என பா.ஜ.க. முயன்று வருகிறது. பெங் களூருவில் எதிர்க்கட்சிகளின் ஒற் றுமை கூட்டம் நடைபெறும் தினத்தில் அமலாக்கத் துறை இச் சோதனையை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment