சிங்கப்பூர் தமிழ்ச்செல்வி எழுதிய "காற்றலையில்" நூலினை கவிஞர் அறிவுமதி வெளியிட்டார்
கோட்டூர் பாலசுப்ரமணியன் தொண்டினை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் பாராட்டுரை
இணையேற்பு விழா!
மன்னார்குடி, நெருஞ்சனக்குடி ச.செல்வதுரை - ச.பானுமதி ஆகியோரின் மகன் முனைவர் செ.முகிலன், வி.கி., ஙி.ணிஞி., வி.கி.,றிபி.ஞி., உரத்தநாடு, கண்ணந்தங்குடி மேலையூர்
சி.பிரபாகர் - பி.திலகவதி ஆகியோரின் மகள் மருத்துவர் ஆனந்தி ஙி.ணி., விஙிஙிஷி, விஞி இவர்களது இணையேற்பு நிகழ்ச்சி 12.07.2023 புதன்கிழமை நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஒப்பந்த உறுதிமொழி கூறி, இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார்.
முன்னதாக கோட்டூர் வடக்கு ஒன்றியத் திமுக செயலாளர் பால.ஞானவேல் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தார். மன்னை நகர் மன்றத் தலைவர் த.சோழராஜன், கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் நாகை இல.மேகநாதன், பேராசிரியர் உமா சாமுண்டீஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிங்கப்பூர் நரசிம்மன் நரேஷ் நன்றியுரை ஆற்றினார்.
நினைவரங்கம் திறப்பு விழா!
பெரியார் பெருந்தொண்டர் வீ.பாலசுப்ரமணியன் - ருக்மணி அம்மாள் நினைவாக, கோட்டூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குக் கட்டப்பட்ட நினைவு அரங்கத்தை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார்.
நிகழ்வில் தலைமையாசிரியர் மு.விஜயதீபா வரவேற்று பேசினார். அறக்கட்டளைப் பணி விளக்க உரையை பா.இந்திரஜித் வழங்கினார். 2022-2023 ஆம் ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் இள.மாதவன், கோட்டூர் ஒன்றியப் பெருந் தலைவர் மணிமேகலை முருகேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா.அம்புஜம், கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஜி.ஆனந்தன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் இ.மஞ்சுளா, பள்ளி மேலாண்மைக் குழுமம் ரா.ரமா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். தமிழாசிரியர் பி.சித்திர வள்ளி நன்றி கூறினார்.
முன்னதாக கோட்டூரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்குக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். கழகக் கொடியினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்றி வைத்து, அருகிலேயே செடி ஒன்றையும் நட்டார்கள்.
நூற்றாண்டு விழா!
அன்று மாலை தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள பி.பி. மகாலில் பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீபாலசுப்ர மணியன் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் வரவேற் புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்தார். நூற்றாண்டு விழா மலரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் சிங்கப்பூர் தமிழ்ச்செல்வி எழுதிய காற்றலையில் எனும் சிறுகதை நூலை பாவலர் அறிவுமதி வெளியிட்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து,
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.சிவபுண்ணியம், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா குணசேக ரன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர்
வை.செல்வராஜ், கோட்டூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பால.ஞானவேல், கோட்டூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஆர் தேவதாஸ், மாவட்ட திராவிடர் கழகச் செய லாளர் கோ.கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் நிகழ்வை நெறியாள்கை செய்தார்.
இந்நிகழ்வில் பா.பூமிநாதன், பா.சித்தார்த்தன், பா.இந்திர ஜித் அம்பிகாபதி, தமிழ்ச்செல்வி, சூர்யா, இராஜராஜன், சுதா அன்புராஜ், தங்காத்தாள், ஞானவேல், தேவதாஸ், மாரிமுத்து, தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.அமர்சிங், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ் ஆறுச்சாமி, தலைமைக் கழக அமைப்பாளர் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வெ.ஜெயராமன், வெ.ஞானசேகரன், திருத்துறைப்பூண்டி பொன்முடி, சித்தார்த்தன், நாகராஜன், தஞ்சை உத்திராபதி, நெல்லுப்பட்டு அ.இராம லிங்கம், கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், வன்னிப் பட்டு தமிழ்ச்செல்வன், இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், ப.க. மாவட்டத் தலைவர் வைவுதமன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், ஆசிரியர் அணி மாவட்டத் தலைவர் தங்க.வீரமணி, ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச் செல்வம், ஆசிரியர் அணி மாவட்டச் செயலாளர் இரா.கோபால், வழக்குரைஞர் சு.சிங்காரவேலு, கழகப் பேச் சாளர் இராம.அன்பழகன், நகரத் தலைவர் கோவி.அழகிரி, செயலாளர் மு.இராமதாஸ், நீடாமங்கலம் ஒன்றியச் செய லாளர் ச.அய்யப்பன், துணைத் தலைவர் இரா.சக்திவேல், மன்னை சித்து, இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், துணைத் தலைவர் வே.அழகேசன், நீடாமங்கலம் இளைஞ ரணி நகரத் தலைவர் இரா.அய்யப்பன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.ராஜேஷ் கண்ணன், மன்னை நகர் அமைப்பாளர் மு.சந்திரபோஸ், ச.முரளிதரன், மாவட்டத் துணைத் தலைவர் ந.இன்பக்கடல், இராயபுரம் ஆட்டோ மதி, ஒன்றியச் செய லாளர் கா.செல்வராஜ், இளைஞரணி செயலாளர் க.இளங் கோவன், ஒன்றியத் துணைச் செயலாளர் கோ.செல்வம், சிவா.வணங்காமுடி, ச.அறிவானந்தம், கோ.திரிசங்கு, பி.கோபால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!
பள்ளியில் நூலகம் அமைக்க முயற்சி
கோட்டூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீ.பாலசுப்ர மணியம் - ருக்மணி அம்மாள் நினைவாகக் கடந்த 10 ஆண்டுகளாக 10,11,12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப் பெண் பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டு வரு கிறது! பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா மற்றும் இதர நிகழ்வுகளுக்கு நிரந்தரமான மேடையும், மேல் கூரையும் கொண்ட ஒரு அரங்கம் இல்லாத நிலை இருந்தது. இதைக் கவனத்தில் கொண்ட வீ.பாலசுப்ர மணியம் அவர்களின் குடும்பத்தார் ஒரு அரங்கத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டனர். அந்த வகையில் 4 ஆயிரம் சதுரடியில் 20 இலட்சம் மதிப்பில் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் மதிப்பீடு இரட்டிப்பாகி ரூ 40 இலட்சம் செலவில் அந்தக் கலையரங்கம் செதுக்கப்பட்டது.
பெரியார் பெருந்தொண்டர் வீ.பாலசுப்ரமணியம் - ருக்மணி அம்மாள் குடும்பத்தார் அனைவரும் இணைந்து, இந்த அரங்கத்தை மேல்நிலைப் பள்ளிக்கும், கிராம மக்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்! இதுமட்டுமின்றி பள்ளியில் நூலகம் அமைத்து கொடுப்பதற்கு தேவை யான முயற்சிகள் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்!
No comments:
Post a Comment