விடுதலை வாசகர் பணி ஓய்வு-பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

விடுதலை வாசகர் பணி ஓய்வு-பாராட்டு

தருமபுரி  பெரியார் படிப்பகத்திற்கு தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக வருகை தரும் விடுதலை வாசகர் பட்டதாரி ஆசிரியர் எம்.ம.சேவியர் செல்வநாதன் தருமபுரி  அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பெரியார் படிப்பக  பொறுப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்விசெல்வி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் மா.செல்லதுரை, அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு.யாழ் திலீபன்,  படிப்பக  உதவியாளர் அருணா, மாரவாடி கிளைக் கழக தலை வர் காந்தி, வாசகர் அசோக்குமார் இணைந்து பயனடை அணிவித்து தந்தை பெரியார் நூல்களை வழங்கி வாழ்த்தி பாராட்டினர். ஆசிரியர் சேவியர் செல்வநாதன் அனைவருக் கும் இனிப்பு  வழங்கி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment