காஞ்சிபுரம், ஜூலை 18-- காஞ்சிபுரம் மாநகர கலந்துறவாடல் கூட்டம் மாவட்ட தலைவர் அ.முரளி தலைமையில் மாவட்டச் செயலா ளர் கி.இளையவேல் முன்னிலை யில்11.7.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது .
மாவட்ட இணைச் செயலாளர் வாலாஜா மோகன், மாநகர செய லாளர் இ.இரவீந்தர், மாவட்ட இளைஞரணி தலைவர் வீ.கோவிந் தராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 58 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட் சியில் மூன்று பகுதிகளாக பிரித்து புதிய கழக அமைப்பு உருவாக்கப் பட்டது.
1)பிளையார் பாளையம் பகுதி (வார்டு1-18)
தலைவர்-வீ.கோவிந்தராஜ், செயலாளர்-சுப்ரமணியம், துணைத் தலைவர்-இர.அரிகரன்
2)சின்னகாஞ்சிபுரம் பகுதி (வார்டு19-36)
தலைவர்-வ.வெங்கடேசன், செயலாளர்-இர.கவுரி
3)ஓரிக்கை பகுதி (வார்டு37-51)
தலைவர் -மு.குறளரசு, செயலா ளர்-கார்த்திக்நாராயணசாமி
வார்டுகள் தோறும் கழகக் கொடியேற்றுவது எனமுடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பிற்கு நன்றி காட்டும் வகையில் உற்சாக மாக செயல்படும் புதிய பொறுப் பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக் கப்பட்டது.
No comments:
Post a Comment