காமராஜருக்கு சிறப்பு செய்த பெருமை கலைஞருக்கானது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

காமராஜருக்கு சிறப்பு செய்த பெருமை கலைஞருக்கானது!

முதன்முதலாக தமிழகத்திலே காமராஜர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை கலைஞருக்கானது.

குமரிக் கடற்கரையில்,  காமராஜருக்கு, ஏற்ற மிகு  மணி மண்டபம் அமைத்த பெருமை கலைஞருக்கானது.

சென்னை கடற்கரை சாலையை, கழக ஆட்சியில்  காமராஜர்  சாலை ஆக்கிய பெருமை கலைஞ ருக்கானது.

தன்னிகரற்ற தலைவர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது அவரிடம் உரிமையோடு கேட்டு  உள்நாட்டு விமான நிலையம் காமராஜர் பெயர் தாங்கி நிற்கிறதென்றால் அந்தப் பெருமை கலைஞருக்கானது.

விருதுநகரில்  காமராஜர் பிறந்த  இல்லத்தை நினைவகம் ஆக்கிய பெருமை கலைஞருக்கானது.

திரு. ராஜாராம் மேலவையில் கலைஞரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அது பெருந்தலைவர் காமராஜர் எழுதியது. அதில் இவ்வாறு எழுதி இருந்தார் ``நான் உதகைக்குச் செல்கிறேன், அங்கு சென்றால் அங்கே அரண்மூர் அரண்மனையில் ஓரிரு வார காலம் தங்க நேரிடும். அதற்கான அனுமதியை எனக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டுகிறேன்’’ என்று எழுதியிருந்தார். அதிலே கடைசியாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அப்படி இடம் ஒதுக்கப்படுவது இயற்கை, அவ்வாறு ஒதுக்கவும் என்று எழுதப்பட்டி ருந்தது. இதைக்கண்ட  கலைஞர் ராஜாராமிடம்  ``காமராஜருக்கு நாடாளு மன்ற உறுப்பினர் என்ற முறையிலே இடம் ஒதுக்க முடியாது, தலைவர் என்ற முறையிலேதான் அவருக்கு இடம் தர முடியும், அவ்வாறே அவர் அங்கே தேவைப்படுகின்ற நாள் வரை தங்கலாம்‘’ என்று கூறி அவர்மீதான பற்றும் பாசமும் மரியாதையும் கொண்டி ருந்தவர் என்ற பெருமை கலைஞருக்கானது.

காமராஜர் பிறந்த நாளை தமிழகமெங்கும் நினைவுகூர்ந்திடும் வகையில் “கல்வி வளர்ச்சி நாள்””  என்ற பெயரில் அனைத்துக் கல்விக் கூடங்களிலும்  கொண்டாட வேண்டுமென்று அறிவித்து, அதனை அடுத்து வருகின்ற ஆட்சியினர் மாற்றி விடக் கூடாதே என்பதற்காகவே  சட்டமாகவே இயற்றி பெருமைப்படுத்திய பெருமை கலைஞருக்கானது.

. பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க!

தொகுப்பு:  பாணன்


No comments:

Post a Comment