வேலூர், ஜூலை 18- வேலூர் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம் 13-7-2023 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு புன்னகை மருத்துவ மனை அரங்கம்,வேலூரில் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் உ.விஸ்வ நாதன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் கு.இளங்கோவன், வி.இ.சிவக் குமார், காப்பாளர்கள் வி.சட கோபன், ச.கலைமணி, குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார், பகுத் தறிவாளர் கழகம் தி.க.சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் க.சிகா மணி, வி.சி. தமிழ்நேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாநகர தலைவர் ந.சந்திரசேகரின் இணையர் ச.சூர்ய கலா மறைவுக்கு கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட் டது
தமிழர் தலைவர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயல்படுத்துவ தெனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முன்னிட்டு மாநகரின் நான்கு பகுதி கிளைக் கழகங்களில் திராவிடர் கழக கொடியேற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் அவர்களின் ஆணைப்படி வேலூர் மாநகரத்தில் வார்டு வாரியாக நான்கு கிளைக் கழகம் அமைக்கப்படுகிறது.
வேலூர்மாவட்டத்தில் உள்ள கிளை நூலகங்களுக்கு விடுதலை நாளிதழ் சென்றடைய செய்தமைக் கும் குடியாத்தம் நகரில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடை பெற்றமைக்கு மாவட்ட தலைவர் இர.அன்பரசனுக்கு மாவட்டத் தின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
23-07-2023 அன்று தீர்மானத்தில் அறிவிக்கப்பட்ட கிளை கழகங் களில் வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு கொடியேற் றுவதென தீர்மானிக்கப்படுகிறது
விருபாச்சிபுரம் கிளைக் கழக தலைவர் ஓவியர் ரே.தயாளன் நன்றியுரையாற்றினார்.
1. காங்கேய நல்லூர் கிளை கழகம் (வார்டு 1-15)
தலைவர்: பொ.தயாளன்
செயலாளர்: கோ.சஞ்சீவி
2. சத்துவாச்சாரி கிளைக் கழகம் (வார்டு16-30)
தலைவர்:க.சிகாமனி
செயலாளர்: இ.கயல்விழி
3. வேலூர் மய்யக் கிளைக் கழகம் (வார்டு31-45)
தலைவர்: என்.கே.சுப்பிரமணி
செயலாளர்:வி.பு.குமார்
4.விருபாச்சிபுரம் கிளை கழகம் (வார்டு 46-60)
தலைவர்:ஓவியர் ரே.தயாளன்
செயலாளர்:ஓவியர்
அன்தோனிராஜ்
No comments:
Post a Comment