ஈரோடு, ஜூலை 24- ஈரோடு மாநகர திராவிடர் கழக கலந்துரையா டல் கூட்டம் 19.07.2023 அன்று மாளை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற் றது.
ஈரோடு மாநகர செயலாளர் தே.காமராஜ் தலைமையேற்று உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம் கழக செயல்பாடுகள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் நற் குணம் மாவட்ட செயலாளர் மணிமாறன், பொதுக்குழு உறுப் பினர் சிற்றரசு ஆகியோர் முன் னிலை வகித்து உரை நிகழ்த் தினார்கள்.
மாவட்டத் துணைத் தலை வர் தேவராஜ், ஜெபராஜ்செல் லத்துரை, சத்தியமூர்த்தி ராஜேந் திர பிரபு, கி.பிரபு உள்ளிட்டோர் உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கலந்துரையாடல் கூட் டத்தின் நோக்கங்களை விளக்கி யும் மாநகராட்சி பகுதி கழகங் களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உருவாக்குவதின் நோக்கம் அதன் இறுதிஇலக்கு அதனால் ஏற்படும் பயன்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் அயராத உழைப்பு, குறித் தும் உரை நிகழ்த்தினார்.
ஈரோடு மாநகரத் தலைவர் திருநாவுக்கரசர் நன்றி கூறினார்.
ஈரோடு மாநகராட்சி பகுதி கழக புதிய பொறுப்பாளர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அறிவித்தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
6.7.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
வைக்கம் போராட்ட நூற் றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டங்களை ஈரோடு மாநகராட்சிக்கு உட் பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்துவது என முடிவு செய்யப் படுகிறது.
ஈரோடு மாநகராட்சி பகுதி களில் முடிவடைந்த விடுதலை சந்தாவை புதுப்பித்து புதிய சந் தாக்களை சேர்த்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சிகளின் வார்டுகளில் கீழ்க்கண்டவாறு பகுதி கழகங்களை பிரித்து புதிய அமைப்புகள் அமைக்கப்படுகி றது. கீழ்கண்டவர்கள் பகுதி கழக பொறுப்பாளர்களாக அறி விக்கப்படுகிறார்கள்.
ஈரோடு மாவட்ட காப்பாளர் சிவகிரி கு. சண்முகம்
ஈரோடு மாநகர திராவிடர்கழகம்
மாநகரத் தலைவர் :கோ.திருநாவுக்கரசு
மாநகர செயலாளர் : தே.காமராஜ்
ஈரோடு மாநகராட்சி 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு
புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
1, ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதி திராவிடர் கழகம் (15 வார்டுகள்) - வார்டு 1 முதல் 15வரை.
பகுதி கழகத் தலைவர்: இரா.பார்த்திபன்
பகுதி கழக செயலாளர்: த.பிரபாகரன்
2, ஈரோடு சூரம்பட்டி பகுதி திராவிடர் கழகம் (15 வார்டுகள்) - வார்டு 16 முதல்30 வரை.
பகுதிக் கழக தலைவர்: ந.சிவராமன்
பகுதி கழகச் செயலாளர்:கி.பிரபு
3, ஈரோடு காசிபாளையம் பகுதி திராவிடர் கழகம் (15 வார்டுகள்) - வார்டு 30 முதல் 45 வரை.
பகுதி கழகத் தலைவர்: ஜெ ஜெயச்சந்திரன்
பகுதிகழக செயலாளர்: த.தங்கராஜ்
4, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி திராவிடர் கழகம் - (15 வார்டுகள்) - வார்டு 45முதல் 60வரை.
பகுதி கழகத் தலைவர் கு.அறிவுக்கன்பன்
பகுதி கழக செயலாளர்: ஜெபராஜ் செல்லத்துரை
No comments:
Post a Comment