விலை உயர்வு நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை தமிழ்நாடு அமைச்சர் தலைமையில் ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 3, 2023

விலை உயர்வு நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை தமிழ்நாடு அமைச்சர் தலைமையில் ஆலோசனை

சென்னை, ஜூலை 3 -  தக்காளி விலை உயர்வால் ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலை மையில் இன்றுஆலோசனை கூட் டம் நடைபெற்றது

தக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்கப்பட்டது. மேலும் 'தக்கா ளியை பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வெளிசந்தைக ளிலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.68-க்கு விற்பனை யானது. அதன்பின்னர், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60 ஆனது. தக்காளி விலை உடனடியாக இறங்கு முகத்தில் சென்றதால் மக்கள் ஆறுதல் அடைந்த வேளையில் மீண்டும் அதன் விலை ஏறுமுகத்தில் சென்று விட்டது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையாகி ஏழை-எளிய, நடுத்தர குடும்பத் தினரை அதிர்ச்சி அடைய செய் துள்ளது.

தக்காளி விலை வரும் நாட் களில் உயரும் பட்சத்தில் ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்ய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் சமீபத் தில் அறிவித்திருந்தார். இதற்கிடையே தக்காளி விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. எனவே ரேசன் கடைகளில் தக்காளி விற் பனை செய்வது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலை மையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (3.7.2023) நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை எப்போது தொடங்கும், ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படும், ஒரு குடும்ப அட்டை தாரருக்கு எத்தனை கிலோ வழங் கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment