கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.7.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* நாடாளுமன்றம் மூன்று நாட்களாக முடக்கம். பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து பேச வேண்டும், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
* நாளை மாலை 5 மணி வரை ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
* மணிப்பூர் பிரச்சினை காரணமாக நாடாளுமன்ற முடக்கம் தொடரும் நிலை உள்ளது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுப் பாடத்திட்டம்; ஆசிரியர்கள் எதிர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ம.பி.யில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் மீது மனிதக் கழிவுகளை பூசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
தி டெலிகிராப்:
* மணிப்பூர் உள்நாட்டுப் போரின் நடுவே உள்ளது, ஆனால் பிரதமர் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன் வலி யுறுத்தி யுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment