சென்னை, ஜூலை 21 பாதிப்புக்கு உள்ளாகும் பொது மக்களிடம் புகார் மனுக்களை பெறாமல் அலைக்கழிக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதுவும் அலைபேசி திருட்டு, இரு சக்கர வாகன திருட்டு, வீடு புகுந்து நகைக்கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு. இவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வர வேற்பாளர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்று காவல் துறை மானியக் கோரிக்கையில் (2021-2022) அறி விக்கப்பட்டது.
இப்பணியில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங் கப்படும் என்று 13.9.2021இ-ல் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதற்கட்டமாக 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள்என மொத்தம் 912 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் /காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடத்துக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ரயில்வே காவல்நிலையங்களில் பணியமர்த்தப் படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட உள் ளனர். இதற்காக தேர்வுசெய்யப்பட்ட காவல் துறையைச் சாராத இவர்களுக்கு, ‘புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்’ என பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ``இப்பணியாளர்கள் காவல் துறையை சாராதவர்கள். ஆனால் அரசு ஊழியர்கள். இவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட் டுள்ளது. காவல் நிலையத்துக்கு எந்த வகை புகார் அளிக்கப்பட்டாலும் அதை பெற்று, மனு பெற்றதற்கான ஒப்புகை சீட்டை வழங்குவார்கள். இந்த விவரம் புகார் அளித்தவர்களின் அலைபேசிக்கு குறுந்தகவலாகவும் அனுப்பி வைக்கப்படும். மேலும், புகார் விவரம் கணினியில் பதிவேற்றமும் செய்யப்படும். இவற்றை உயர் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்வர். விசாரணைக்கு பின்னர் உகந்ததாக இருந்தால் வழக்குப் பதிவு (எப்ஐஆர்) செய்துநடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் அலைக் கழிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு, புகார் மனுக்கள் அனைத்தும் பெறப்படுவது உறுதி செய்யப்படும். அதை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட காவலர்கள் விசாரணை மேற்கொள்வர். அதுமட்டும் அல்லாமல் புகார் அளிக்க வருவோருக்கு வேண்டிய வசதியும் செய்து கொடுக்கப்படும்’ என்றனர்.
No comments:
Post a Comment