அமைச்சரை நீக்குவதாக ஆளுநர் அறிவித்தது தவறு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

அமைச்சரை நீக்குவதாக ஆளுநர் அறிவித்தது தவறு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு

சென்னை, ஜூலை 1-  செந்தில் பாலாஜியை அமைச்சரவை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது தவறு என்றும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை எனவும் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரி வித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு இடமில்லை. அதனைத் தெரிந்துகொண்டு ஆளுநர் தனது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளார். குற்ற வழக்குகளில் சிக்கிய பல பாஜக அமைச்சர்கள் நீதிமன்ற படிகளுக்கு அதிகாரத்துடன்தான் சென்று வந்தனர். 

பெரும்பான்மைப் பெற்ற ஒருவரை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ள கூறும் உரிமையைத் தவிர ஆளுநருக்கு வேறு அதிகாரமில்லை.

ஆளுநரை பலமுறை சந்தித்துப் பேசியுள் ளேன். அவர் பண்பானவர். ஆனால் உணர்ச் சிவசப்படக்கூடியவர். சீக்கிரம் உணர்ச்சிவசப் பட்டு ஆளுநர் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழகம் என்பார் - பின்னர் தமிழ்நாடு என மாற்றி மீண்டும் அறிக்கை விடுவார்.  மதச்சார்பற்ற நாடு இந்தியா. இந்திய அரசமைப்பு சட்டப்படி அமைச்சரை அதிகாரத்திலிருந்து நீக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment