மகாராட்டிராவில் மீண்டும் ஆட்சி மாறுமா? குழப்பமோ குழப்பம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 23, 2023

மகாராட்டிராவில் மீண்டும் ஆட்சி மாறுமா? குழப்பமோ குழப்பம்!

மும்பை, ஜூலை 23 - தேசியவாத காங்கிரஸ் கட்சியை  உடைத்த அஜித் பவார், சரத் பவா ருக்கு துரோகம் செய்துவிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். 

தனக்கும் தன்னுடன் வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேருக்கும் அமைச்சர் பதவிகளைப் பெற்றார். அப்போதே மகாராட்டிரா ஆளும் கூட்டணிக்குள் புகைச்சல் கிளம் பியது.  குறிப்பாக, சிவசேனாவை உடை த்துக் கொண்டு வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பி னர்கள், இனிமேல் தங்களுக்கு மரி யாதை இருக்காது என்று கருதத் துவங்கினர். முதலமைச் சர் பதவியே தங்களுக்கு வழங் கப்பட்டு இருந்தாலும்,  அஜித் பவார் கூட்டணிக்குள் வந்த பிறகு, இனி அது அதிகார மில்லாத பதவியாகவே இருக்கும் என்று வெளிப்படையாகப் பேசத் துவங்கினர். இது பாஜக தேவேந்திர பட்னாவிசின் திட்டமிட்ட ஏற்பாடு என்று புழுங்கத் துவங்கினர்.

தேசிய ஜனநாயக கூட்டணி யில் ஏக்நாத் ஷிண்டே வந்து இணை ந்தபோது, ‘முதலமைச்சர் பதவி எப்படி யும் தனக்குத்தான் கிடைக்கும்’ என தேவேந்திர பட்னாவிஸ் கணக்குப் போட் டிருந்தார். ஆனால், ஷிண்டே பிடிவாதமாக இருந்து, முதல மைச்சர் பதவியை தன்வசமாக் கிக்கொண்டார். பட்னாவிசிற்கு துணை முதலமைச்சர் பதவியே கிடைத்தது. இதனால் பதவி யேற்பு விழாவின்போது கூட இறுகிய முகத்துடனேயே பட் னாவிஸ் காணப்பட்டார். இந்த ஏமாற்றத்தை பட்னா விசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அப்போது எல் லோரும் அறிவார்கள். பதவி யேற்புக்கு சில மணிநேரங்கள் வரை  முதலமைச்சர் ஆசை காட் டப்பட்டு, கடைசி நேரத்தில், அவர் ஏமாற்றப் பட்டிருந்தார். எனினும் அதனை வெளிக்காட் டிக் கொள்ளாத பட்னாவிஸ், ஷிண்டே செல்வாக்கைக் குறைக்க மறைமுக திட்டங் களைத் தீட்டத் துவங்கினார். அந்த அடிப்படையில்தான், அஜித் பவாரை தற்போது கூட்டணிக்குள் கொண்டு வந்து, ஷிண்டே இல்லாவிட்டாலும், அஜித் பவார் மூலமாக மகா ராட்டிரா அரசு நீடிக்கும்; ஷிண்டே அணியினர் விரும் பினால் தொடரலாம். இல்லா விட்டாலும் பிரச்சினை இல்லை என்ற சூழலை ஏற்படுத்திய தாக ஷிண்டே தரப்பினர் புலம்பலை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில்தான், அஜித் பவாருக்கு துணைமுதலமைச்சர் பதவியு டன் நிதித்துறையும் ஒதுக்கப்பட் டிருப்பது, இந்தப் புகைச்சலை பலமடங்கு அதிகப்படுத்தியுள் ளது. 

பாஜக-வைப் பொறுத்தவரை, அஜித் பவாருக்கு நிதித்துறையை வழங்கியிருப்பதானது, தேசிய வாத காங்கிரசை உடைத்ததற் கான பரிசு. ஆனால், ஷிண்டே அணியினரைப் பொறுத்தவரை, இது தங்களின் முக்கியத்துவத் தைக் குறைக்கும் திட்டம் என்று பொங்குகின்றனர். அதனை வெளிப்படையாகவே பேச வும் துவங்கியுள்ளனர். நடக்கும் எதுவும் சரியாக இல்லை என்று கூற  ஆரம்பித்துள்ளனர்.  கடந்த ‘மகா விகாஸ் அகாதி’  கூட்டணியின்போது நிதித்தேவை க்கு அஜித் பவாரின் காலில் விழ வேண்டியிருந்தது; ஏக்நாத் ஷிண்டே  தலைமையில் தனி அணியாக பிரி ந்ததற்கு இதுவும் முக்கியமான காரணமாக இருந் தது. அப்படியிருக்க இப்போதும் நிதித் தேவைக்கு அஜித்  பவாரின் தயவைத்தான் நாடியிருக்க வேண்டுமா..? இதற்கு மகா விகாஸ் அகாதி கூட்டணியிலேயே இருந்திருக்கலாமே.. என்று அவர் களிடம் பேச்சுக்கள் எழ ஆரம்பித்துள்ளன. அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப் படுவதை, தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்ப தாக, ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவை ஆதரிக்கும் சுயேட்சை சட்டமன்ற உறுப் பினரான பச்சு காடு பகிரங்கப் படுத்தியுள்ளார்.

முந்தைய மகா விகாஸ் அகாதி ஆட்சியின் போதும் அஜித் பவார் நிதியமைச்சராகத் தான் இருந்தார். அப்போது, சிவசேனா சட்டமன்ற உறுப் பினர்களின் தொகுதிகளுக்கான மேம்பாட்டு நிதியில் ஓரவஞ்சனை செய்தார். சொல்லப் போனால், உத்தவ் தாக்கரே-வுக்கு எதிராக, கிளர்ச்சி செய்து வெளியேறக் காரணமே, அஜித் பவா ரின் நடவடிக்கைகள்தான். அதே அஜித் பவார் தற்போது தேசிய ஜன நாயகக் கூட்டணியில் துணை முதலமைச்சராகி இருப் பதுடன், நிதித்துறையையும் பெற்றிருப்பதை எப்படி ஏற்க முடியும்? என்பதே ஷிண்டே அணியினரின் கேள்விகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.  அஜித் பவார் தேசிய ஜனநாயக கூட்ட ணியில் இணைவார் என்று யூகங்கள் வெளியான போதே, “அவர், என்சிபி தலைவர்கள் குழுவுடன் அரசாங்கத்தில் இணைந் தால்,  மகாராட்டிராவில் சிவ சேனா அரசு அங்கம் வகிக்காது” என்று ஷிண்டே அணியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் கூறினார். “என்சிபி  துரோகம் செய்யும் கட்சி. ஆட்சி யில் இருந்தாலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இருக்க மாட் டோம். என்சிபி-யை பாஜக தன்னுடன் அழைத்துச் சென் றால், மகாராட்டிரா அதை விரும்பாது. நாங்கள் காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் செல் வதை மக்கள் விரும்பாத கார ணத்தாலேயே (பிரிக்கப்படாத சிவசேனாவில் இருந்து) வெளி யேற முடிவு செய்தோம்” என்று ஆரம்பத்திலேயே ஷிர்சத் கூறினார். 

“எங்கள் தலைமையுடன் (அப்போதைய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன்) எங்க ளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் காங்கிரஸ் மற்றும் என்சிபி-யை கையாள்வ தில் எங்களுக்கு சிக்கல் உள்ளது, குறிப்பாக, என்சிபி-யை..”  என்று மராத்தி ஊடகம் ஒன்றுக்கு ஷிர்சத் பேட்டி அளித்தார். “என்சிபி மற்றும் காங்கிரஸுக்கு நிதி கிடைத்தது. ஆனால், சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர் களால் தேவையான நிதியைப் பெற முடியவில்லை. எங்கள் தொகுதியில் உள்ளவர்கள், ‘சிவசேனாவைச் சேர்ந்தவர் முத லமைச்சராக (உத்தவ் தாக்கரே) இருக்கும்போதும், உங்களுக்கு நிதி கிடைக்காமல், மற்ற கட்சி களுக்கு எப்படி வருகிறது?’ என்று எங்களிடம் கேள்வி எழுப்பினர்” என்பதையும் சுட்டிக்காட்டினார். இதையே, பைதான் சட்டமன்ற உறுப்பினர் சந்தீபன் பும்ரேவும் கூறியிருந் தார். “அந்த நேரத்தில் (மகா விகாஸ் அகாதி உடனான கூட் டணியின் போது), காங்கிரஸ் பெரிய பிரச்சினை யாக இல்லை. மாறாக, எங்களால் என்சிபி-யுடன்தான் ஒத்துப்போக முடிய வில்லை” என்று அவர் கூறினார். “எனக்கு தனிப்பட்ட பிரச்சினை கள் எதுவும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வளர்ச்சி நிதி வழங்குவதில், அஜித் பவாரு டன் சிக்கல்கள் இருந்தன. வளர்ச்சி நிதிக்கான பங்கீட்டில் பெரும் சமத்துவமின்மை இருந் தது. சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப் பட்டதாக உணர்ந்தனர்” என்று பும்ரே கூறினார்.

சதாரா மாவட்டத்தில் உள்ள கோரேகானைச் சேர்ந்த எம்எல்ஏ மகேஷ் ஷிண்டேவும், “என்சிபி கட்சிக்கு 600 கோடி வரை நிதி கிடைக்கிறது என்றால், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 60 கோடி தான் நிதி கிடைத்தது; அத்துடன் சிவசேனா சட்டமன்ற உறுப் பினர்கள் அரசு விழாக்களுக்கு அழைக்கப்படவில்லை; முதலமைச்சர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களு க்கும் கூட அஜித் பவார் செவிசாய்க்க வில்லை” என்று குற்றம் சாட் டினார். இவ்வளவு ஏன், தற் போது அஜித்  பவாரை கூட் டணிக்கு கொண்டு வரு வதற்கு தீவிர முயற்சி எடுத்த தேவேந்திர பட்னாவிசே ‘சமமற்ற நிதிப் பகிர்வு’ பிரச்சினையை சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர் கொண்டு வருவதாகவும், பெரும் பாலான நிதி என்சிபி வெற்றி பெற்றிருந்த தொகுதிகளுக்கே ஒதுக்கப்பட்டது என்றும் 2022 மார்ச்சில் குற்றம்சாட்டியதை யும், ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா சட்டமன்ற உறுப்பி னர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவையெல்லாம் பாஜக தலை மைக்கும் தெரியும். ஆனால், சிவ சேனா, தேசியவாத காங் கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் உடைத்து பலவீனமாக்கி விட் டோம் என்ற பெரும் திருப்தியில் அந்தக் கட்சி இருக்கிறது. மாறாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணியினர்தான் தற்போது முப் பக்கமும் இடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், எப்போது வேண்டுமானாலும், மகாராட்டிர ஆளும் கூட்டணி யில் விரிசல் ஏற்படுவதுடன், மறு படியும் ஆட்சிமாற்றம் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு காட்சிகள் அரங்கேறலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.


No comments:

Post a Comment