மதுரை, ஜூலை 10 - காவல் துறை உயரதிகாரிகளின் மனஅழுத்தத்தை போக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் தற்கொலை சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு மரியாதை செலுத்த தேனி வந்த காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் காவல் துறை தலைமை இயக்குநர் அன்று காலை மதுரை காவல கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல்துறை உயரதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காவல்துறையினர் மன அழுத்தம் இல்லாமல் பணி யாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பொது மக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நட்புறவை பேணிக்காத்தல் மிகவும் அவசியம்.
உரிய காரணங்களோடு விடுமுறை கேட்டு விண்ணப் பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர் களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகை யில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நிலு வையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண் டும். மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் நபர்கள், இரு சக்கர பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். மன அழுத்தம் உள்ள காவல் அதிகாரிகள், நண்பர்கள், குடும்ப மருத்துவர்களிடம் கூறி மன அழுத்தத்தை போக்க வேண்டும். அதிகாரிகள் அள வில் மன அழுத்தத்தை போக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment