புதுடில்லி, ஜூலை2 - பொது சிவில் சட்டம் தொடர்பாக தாக்கீது வெளியிட்ட சட்ட ஆணையத்திடம் நாடா ளுமன்ற நிலைக்குழு 3ஆம் தேதி கருத்து கேட்கிறது.
பிரதமர் மோடி கருத்து
திருமணம், மணவிலக்கு, வாழ் வாதாரக் கொடை, தத்தெடுப்பு உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை கடைப் பிடிக்க பொதுசிவில் சட் டம் வகை செய்கிறது.
பொது சிவில் சட்டம் தொடர் பான விவாதம், சமீப காலமாக வேகமெடுத்து உள்ளது. பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பிரத மர் மோடி, பொது சிவில் சட் டம் அவசியம் என்று கூறினார்.
அவரது கருத்துக்கு காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பொது தாக்கீது
இதற்கிடையே சட்ட ஆணை யம், பொது சிவில் சட்டம் தொடர் பாக கடந்தமாதம் 14ஆம் தேதி பொது தாக்கீது வெளியிட்டது. பொது சிவில் சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது.
இதை ஏற்று, இதுவரை, சட்ட ஆணையத்துக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் கருத்துகள் வந்துள்ளன.
நாடாளுமன்ற நிலைக்குழு
இந்நிலையில், பொது சிவில் சட்ட விவகாரத்தில், சட்டம் மற் றும் பணியாளர் நலன் தொடர் பான நாடாளுமன்ற நிலைக் குழு தலையிட்டுள்ளது.
சட்ட ஆணை யம் வெளியிட்ட பொது தாக்கீது தொடர்பாக 3ஆம் தேதி கருத்து தெரிவிக்க வருமாறு சட்ட ஆணை யத்துக்கும், ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் சட்ட மியற்றும் துறைக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 3ஆம் தேதி, சட்ட ஆணையம் மற்றும் ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கருத்து கேட்கிறது.
No comments:
Post a Comment