ராய்ப்பூர், ஜூலை 12 - இமாசலப் பிரதேசம், கருநாடக மாநில சட் டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்து ஆட்சி யைப் பறி கொடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி அமைச்சர் பட்டாளமே முற்றுகையிட்டும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
இந்த வரிசையில், அடுத்ததாக தேர்தல் நடைபெறவிருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் பா.ஜ.க. தோற்பது உறுதியாகி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பூபேஷ் பாகேல் தலைமையிலான ஆளும் காங் கிரஸ் கட்சி, இரண்டாவது முறை யாக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்பது ‘லோக் போல்’ (லிஷீளீ றிஷீறீறீ) நிறுவனம் நடத் திய கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களிலும் பா.ஜ.க. 15 இடங்களிலும் வென் றன.
தற்போது சத்தீஸ்கர் சட்டப் பேர வையில் காங்கிரசிற்கு 71 சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க.வுக்கு 14 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள னர். முதல மைச்சராக மூத்த காங்கிரஸ் தலை வர் பூபேஷ் பாகேல் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 2023ஆம் ஆண்டின் இறுதியில் சத்தீஸ்கர் மாநில சட்டப் பேர வைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. பிரத மர் மோடி தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பயணம் மேற் கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். ஆனாலும், சத்தீஸ்கரில் பாஜக கனவு பலிக்காது என்பதைக் காட் டுவதாகவே கருத்துக் கணிப்பு முடி வுகள் அமைந்திருக்கின்றன.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, ‘லோக் போல்’ (லிஷீளீ றிஷீறீறீ) நிறுவனம் நடத் திய கருத்துக் கணிப்பு முடிவு கள் தற்போது வெளியிடப்பட்டு உள் ளன. அதில், ஆளும் காங்கிரஸ் கட்சி, 56 முதல் 60 இடங்கள் வரை பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், எதிர்க் கட்சி யான பாஜக-வுக்கு 25 முதல் 29 இடங்கள் வரையே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரசுக்கு 43 முதல் 45 சதவிகித வாக்குகளும், பா.ஜ.க.-வுக்கு 37 முதல் 39 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரி விக்கப்பட்டு உள்ளது. இங்கு மாயாவதி தலைமையிலான பகு ஜன் சமாஜ் கட்சி 4 முதல் 6 சதவிகிதம் வரையிலான வாக்குகளைக் கைப்பற்றும் என்றும், அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் 2 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment