சென்னை, ஜூலை 27 அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நீதிமன்ற காவல் நேற்றுடன் (26.7.2023) முடிந்த நிலையில் 3-ஆவது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். நேற்றுடன் காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment