சென்னை,ஜூலை23 - ஊரகப் பகுதி மக்களின் நலனுக்காக 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிறப்பு மருத்துவ மய்யம் விரைவில் தொடங்கப்பட உள் ளது. இதற்கான நடவடிக்கைகளை மாநில பொது சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது.
காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகின்றன. எதிர்வரும் 2025-க்குள் அந்த நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ் நாடு முழுவதும் காச நோயாளி களுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர் களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட் டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவர்களுக்கு நடமா டும் ஊடுகதிர் கருவிகளை அவர் களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.
இதனால் அந்த நோயின் தாக் கத்தால் பாதிக்கப்படும் நோயாளி களில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவ தாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆண்டுதோறும் காச நோயால் 70,000 பேர் வரை பாதிக் கப்படுகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் உள்ள காசநோயாளிகளைக் கண் டறிந்து சிகிச்சை அளிக்கும் வகை யில், 424 ஆரம்ப சுகாதார நிலை யங்களில் அதற்கான சிறப்பு மய்யம் விரைவில் தொடங்கப்பட உள் ளது.
இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் செயல்படுத்தப் பட்டு வரும் காசநோய் தடுப்பு திட் டத்தின் அடுத்தகட்ட நடவடிக் கையாக கிராமப்புற மக்களுக்கு தொடக்க நிலையிலேயே காச நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகா தார நிலையங்களில் சிறப்பு பரிசோ தனை மய்யம் தொடங்கப்பட உள் ளது. அந்த மய்யங்களில் காசநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் களுக்கு உரிய சிகிச்சை வழங்குவ துடன் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை அளிக்கப்படும். அதேபோல், பாதிக்கப்பட்டவர் களின் வீடுகளுக்கு அருகே வசிப் பவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும்.
இதன் வாயிலாக, காசநோயை கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment