தி.மு.க. மாணவரணி கண்டனம்
சென்னை, ஜூலை 27 பல்கலைக் கழக செயல்பாட்டில் ஆளுநர் தலையீடு -அரசியல் தொடர்புடைய அமைப்புகளில் மாணவர்கள் சேரக்கூடாது என்பதா? என்று தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. மாணவரணிச் செய லாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தொன்மையும், பாரம்பரியமும் மிக்க "சென்னை பல்கலைக்கழகத்தின்"கீழ் நூற் றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பெருமைமிகு பல்கலைக் கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் களிடமிருந்து, ''எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்படமாட் டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடமாட்டேன்'' என்றும் உறுதி மொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டு மென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
மேலும், மாணவர்கள் இந்த விதிமுறைகளை மீறினால், துறையின் தலைவரால், உடனே மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு நீக் கப்படுவர் என்று அப்படிவத்திலேயே குறிப் பிடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக் கிறது.
இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளை அறிந்தவர்களாய், புரிந்தவர்களாய் நியாயமான முறையில், ஜனநாயக வழிமுறைகளை கடைப்பிடித்து கேட்டுப் பெறக்கூடிய நிலையை இளைய தலைமுறையினருக்கு வழங்கவேண்டிய கடமை பல்கலைக் கழகங்களுக்கு உண்டு. ஆனால், தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல் பாட்டிலும் தலையிடத் தொடங்கியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையையும், சனாதன சித்தாந்தங்களையும், தமிழ்நாட்டில் புகுத்திடும் பெரும் முயற்சியில் பல்கலைக் கழகத்திற் கெல்லாம் கட்டளையிட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
- இவ்வாறு தி.மு.க. மாணவரணிச் செய லாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment