நடுநாலுமூலைக்கிணறு, ஜூலை 1- தமிழர் தலைவர் பத்து அக வையில் அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரின் தத்துவங் களை மேடையில் முழங்கிய 80ஆவது ஆண்டான 27.6.2023 அன்று மாலை நான்கு மணிக்கு திருச்செந்தூர் ஒன்றியம் நடு நாலுமூலைக்கிணறில், ஒன்றி யத் தலைவர் ரெ.சேகர் இல்லத் தில் திராவிட மாணவர் சந்திப் புக் கூட்டம் திராவிட மாண வர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தொடக்கவுரையாற்றி னார்.
மாவட்டத்தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன் ஆகி யோர் கருத்துரையாற்றினார். திருச்செந்தூரில் பொதுக் கூட் டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாணவர் கழகம், இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர்.
இரண்டாவது நிகழ்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்ரமணியபுரத்தில் வள்ளி யூர் பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் இ.மோகன சுந்தர் இல்லத்தில் எழுச்சி யோடு நடைபெற்றது.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந் தூரபாண்டியன் தலைமை வகித்தார். காப்பாளர் இரா.காசி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ந.குணசீலன், வள்ளி யூர் நகர செயலாளர் இரமேசு, மகளிரணி பொறுப்பாளர் நம்பித்தாய் ஆகியோர் முன் னிலை வகித்தார்கள்.
மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் ஆகியோர் அறிவாசான் தந்தை பெரியார், தமிழர் தலைவர் அவர்களின் தொண்டால் விளைந்த பயன்களை விளக்கி உரையாற்றினர். திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டத்தை உற்சாகம் பொங்க ஏற்பாடு செய்த இ.மோகன சுந்தர், பங்கேற்று சிறப்பித்த மாணவர்கள், இளைஞர்கள், சிறப்பாக ஒருங்கிணைத்த மாவட்டக் கழக, நகர கழகப் பொறுப்பாளர்களுக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து தொடக்கவுரையாற்றி னார். 84அகவை கொண்ட காப்பாளர் நெல்லை இரா.காசிக்கு மோகன் சுந்தர் பய னாடைபோர்த்தி பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்தார்.
இருபத்தைந்து மாணவர் கள் பங்கேற்றனர். அனைவருக் கும் பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் மோகன் சுந்தர் பயனாடை போர்த்தியும், புத்தகங்கள் வழங்கியும், சிற் றுண்டி வழங்கியும் சிறப்பித்து நன்றி கூறினார்.
சட்டபேரவைத் தலைவர் மகிழ்ச்சி
தொடர்ந்து லெப்பை குடி யிருப்பில் தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் அப்பாவு அவர்களை இல்லத்தில் சந்தித் தோம் .மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் புத்தகம் வழங்கினார். என்ன நிகழ்ச்சி என்று கேட்டார் மாணவர் சந்திப்புக் கூட்டம் என்றவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
சூலை 15ஆம் தேதி வள்ளியூ ரில் பச்சைதமிழர் காமராசர் பிறந்தநாள் விழா என்றவுடன் சிறப்பாக நடத் துங்கள் எனது பங்களிப்பை பெற்றுக்கொள் ளுங்கள் எனக் கூறினார்.
தமிழர் தலைவர் தலைமை யில் கலந்துறவாடல் கூட்டத் தில் வள்ளியூர் இரமேசு-நம்பித் தாய் இணையர்கள் தாலி அகற்றிக் கொள்ளுவதாக தெரிவித்தார்கள். இரண்டு நிகழ்ச்சி களிலும் பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப் பாளர் அறிவுச் சுடர், உரத்த நாடு தெ.வினோத் பங்கேற்று சிறப்பித் தார்கள்.
No comments:
Post a Comment