பொது சிவில் சட்டம்: மாநிலங்கள் அவையில் வைகோ எழுப்பிய கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 22, 2023

பொது சிவில் சட்டம்: மாநிலங்கள் அவையில் வைகோ எழுப்பிய கேள்வி

சென்னை, ஜூலை 22 - ஒருமித்த கருத்து ஏற்படும்வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப் படாது என்று சிறுபான்மை சமூ கங்களுக்கு அரசு உறுதியளிக் குமா என்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், பொது சிவில் சட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு, 20.7.2023 அன்று ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் பதில் அளித்தார். 

அதன் விவரம் வருமாறு:- (அ) சட்ட ஆணையம் அண்மையில் புதிய ஆலோசனை செயல்முறையைத் தொடங்கியுள்ளதா? பொது மற்றும் மத அமைப்புகளிட மிருந்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் (ஹிசிசி) பற்றிய கருத்துகளைக் கேட்டதா?(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? (இ) பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களின் கருத்துக்கு எதிராக இருக்கும் போது, சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வதற்கான காரணம் என்ன? (ஈ) அனைத்து அரசியல் கட்சிகளிடையே பரந்த ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என்று சிறுபான்மை சமூகங் களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா? அப்படியானால் அதன் விவரங்கள்...  சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில்: (அ முதல் ஈ வரை) இந்தியாவின் 21ஆவது சட்ட ஆணையம் 31.08.2018 அன்று "குடும்பச் சட்டத்தின் சீர்திருத்தம்" குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. 

ஆனால் அது எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்க வில்லை. மேற்கூறிய வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால், பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், அதன் முக்கியத்து வத்தையும் கருத்தில் கொண்டு, 22ஆவது சட்ட ஆணையம், 14.06.2023 அன்று மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் பெற முடிவு செய்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment