ஆவடியில் சிறப்புடன் நடந்த வைக்கம் போராட்டம் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 6, 2023

ஆவடியில் சிறப்புடன் நடந்த வைக்கம் போராட்டம் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

ஆவடி, ஜூலை 6- ஆவடி நகர திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் 4.7.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 -மணிக்கு காமராஜர் நகர் 4ஆவது தெரு மெயின் ரோடு சந்திப்பில் ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன் தலைமையில் நடைபெற்றது.

புதிய காலம் இசைக்குழு சார் பில் தோழர்கள் வ.மதிவாணன், கிராமிய பாடகி ரத்னா,பறையிசை சதிஷ், பாடகர் தீபன் சேகுவேரா ஆகியோர் தந்தை பெரியார், -கலைஞர் அவர் களைப் பற்றிய பாடல்கள் பாடி சிறப்பித்தனர்.

பின்னர் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி வர வேற்றார்.

ஆவடி மாவட்ட கழக  செய லாளர் க.இளவரசன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், மாவட்ட துணை தலைவர் மு.ரகுபதி, மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல் வன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, தி.மு.க.மாநகராட்சிமாமன்ற உறுப்பினர் சசிகலா ஆனந்தன், மாவட்ட கழக மகளிரணி தலை வர் பூவை செல்வி, பகுத்தறி வாளர் கழக ஆவடி மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், துணை செயலாளர் சுந்தர் ராஜன், செல்வி முருகானந்தம், கண்ணன், அண்ணாமலை, திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் செ.பெ. தொண்டறம்ஆகியோர் முன்னி லையில் கழக மாவட்ட காப் பாளர் பா.தென்னரசு, பகுத்தறி வாளர் கழக ஆவடி மாவட்ட தலைவர் இரா.ஜானகிராமன், மாவட்ட கழக தலைவர் வெ.கார் வேந்தன் ஆகியோர் உரை யாற்றிய பின் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் எழுச்சியுரையாற்றி னார்.

நிகழ்வில் வேல்முருகன், திருமுல்லைவாயில் இரணியன், பட்டாளம் பன்னீர்செல்வம்,பழ.முத்துக்குமார்,மா.சிலம்பரசன்,  பூவை பகுதி கழக தலைவர் பெரியார் மாணாக்கன் பொதுக் குழு உறுப்பினர் பூவை மணி மாறன், பூவை பகுதி இளைஞ ரணி தலைவர் சு.வெங்கடேசன், ரவீந்திரன், வை.கலையரசன் தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக் கம் சா.தாமோதரன், மதுரவா யல் பகுதி கழக தலைவர் 

சு. வேல்சாமி, சோமங்கலம் இன மாறன் (எ) பாலமுரளி ,பேபி ஜெயராமன், பட்டாபிராம் இன்பமணி, பன்னீர்செல்வம் மகளிரணி மணிமேகலை, சுஜித்ரா, உ.கனிமொழி, திரா விட மாணவர் கழகம் சமிக்சா, செம்மொழி, சமத்துவமணி, பெரியார் பிஞ்சுகள் இளந் தென்றல், மணியம்மை மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment