இளைஞர் காங் கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே ஆர்வமாக உள்ளன. அதிகாரத்துக்காக மணிப்பூரை எரிப்பார்கள். நாட்டையே எரிப்பார்கள். அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் எந்த மாநிலமாக இருந்தாலும் அதிகாரத்துக்காக முழு நாட்டையும் விற்று விடுவார்கள். நாட்டின் மீது அன்பு கொண்டு, நாடு புண்படும்போது, நாட்டு மக்கள் துயரப்படும் போது அவர்களும் வருந்துவார்கள். ஆனால் அவர்கள் மனதில் உண்மையில் அப்படியொரு அன்பு, வலி, கவலை இல்லை. மக்களின் வலிகளை உணராமல் பிளவுப்படுத்தும் நோக்கத்தில் இரண்டும் செயல்படுகின்றன” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
புதுடில்லி, ஜூலை 28 - பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் அதிகாரத்துக்காக நாட்டையே எரித்து விடும் என காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment