திருவாரூர்,ஜூலை5- திருவாரூர் மாவட்டம், நன் னிலம் அருகே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் கண்டெடுக்கப் பட்டன.
கொல்லுமாங்குடி மாங்குடித் தோப்புத் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (62). இவரது வீட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்வதற்காக 2.7.2023 அன்று மாலை பள்ளம் தோண்டினார். அப்போது, சுமார் 3 அடி ஆழத்தில் சிறிய உலோகப் பெட்டி புதைந்தி ருந்தது தெரியவந்தது. அதில், கடவுளர் சிலைகள் இருந்தன.
இதுகுறித்து பேரளம் காவல்நிலையத்துக்கு செல்வராஜ் தகவல் தெரிவித்தார். அங்கு காவல்துறையினருடன் வந்த கிராம நிர்வாக அலுவலர், அந்த சிலைகளை உலோகப் பெட்டியுடன் பெற்று நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத் தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன்
தெரிவித்ததாவது:
குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டிய இடம் அங்குள்ள சிறீமாகாளநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமானது. இங்கு கண்டெடுக்கப்பட்ட உலோகப் பெட்டியில், சிறிய அளவிலான ஒரு பெருமாள் சிலை, மகாலட்சுமி சிலை, 2 ஆண்டாள் சிலைகள், ஒரு கருடன் சிலை, மற்றொரு சிலை, 5 ருத்ராட்சங்கள், மூடி யுடன் செம்பு போன்றவை இருந்தன.
இதுகுறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. தொல்லியல் துறை நிபுணர்கள் இந்த சிலைகளை ஆய்வு செய்யும்போது அதன் மதிப்பு மற்றும் கால அளவு தெரியவரும் என்றார்.
No comments:
Post a Comment