மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தல் அ.வ.அ.கல்லூரியில் வைக்கம் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தல் அ.வ.அ.கல்லூரியில் வைக்கம் விழா!

மன்னன்பந்தல், ஜூலை 9- மயிலாடுதுறை மாவட் டம் மன்னன்பந்தல் அ.வ. அ.கல்லூரி தமிழ்த்துறை சார்பில் 7.7.2023 அன்று காலை 11 மணியளவில் 'திண்ணை (வாசிப்பின் வாசல்)' நிகழ்ச்சி நடை பெற்றது. 

இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் மு.சரவணன் வரவேற்க தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் திரு முருகன் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில் பெரியாரின் போராட்ட வாழ்க் கையை எடுத்துரைத்து ஏற்றத் தாழ்வற்ற சமு தாயத்தைப் படைப்பதே அவரது தலையாய கொள்கையாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் செல்ல.கனிமொழி 'வைக் கம் போராட்டம் - சமூக சீரமைப்பின் தொடக்கம்' என்ற தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.

பேராசிரியர் கனி மொழியின் பெற்றோர் இரெ செல்லதுரை-- வண் டார்குழலி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா  இராவணலீலா மாநாட்டில் அன்னை மணியம்மையார் தலை மையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக் கது.

துறைத்தலைவர் தமிழ்வேள் நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கி பெரியாரின் வைக்கம் போராட்ட பங்களிப்பை மிகவும் உணர்ச்சிபொங்க எடுத்துரைத்தார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கி.தளபதி ராஜ், இரெ.செல்லதுரை ஆகியோருக்கு புத்தகங் கள் வழங்கி சிறப்பு செய் யப்பட்டது.

முதுகலை இரண்டா மாண்டு மாணவி ஜெ. பிருந்தா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment