பிரான்சு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தான் என்பது வரலாறு.
இப்பொழுது இந்தியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?
உலகம் சுற்றும் வாலிபரான நமது பிரதமர் 'மணிப்பூர் பற்றி எரிகிறதா? அப்படியா?' என்று கேட்கும் நிலையில் - அவர்தம் அக்கறை எந்த அளவு என்பது அப்பட்டமாகிறது.
'குகி' சமுதாயப் பெண்களின் அலறல் சத்தம் நம் நெஞ்சைக் கோடாரிக் கொண்டு பிளக்கிறது.
பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படுகிறார்களே, அய்யகோ, இவர்களின் தாயும் மகளும், சகோதரியும் பெண்கள் அல்லவா!
குருதி கொதிக்கிறதே - குடல் அறுந்து விழுகிறதே - ஆனாலும் மதவாத ரத்த ஓநாய்கள் ஒய்யார நடைபோட்டுத் திரிகிறார்களே!
அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களின் மனுதர்மம் பெண்கள் பெரும்பாலும் விபசார தோஷம் உள்ளவர்கள் என்று தானே சொல்லுகிறது.
பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று அவர்களின் 'பகவான்' கீதோபதேசம் செய்திருக்கிறாரே! இந்த மனப்பான்மை கொண்ட குரூரர்களின் மனம் என்பது மகளிரை மனிதத்தின் ஒரு கூறு என்று நினைக்குமா?
மனிதாபிமானம் - மானிட உரிமை உணர்வுள்ளவர்கள் இந்தியா முழுவதும் வீதிக்கு வந்து கிளர்ச்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பெண்ணுரிமைப் பெருமான் தந்தை பெரியார் பிறந்த மண் எரிமலையாக ஆங்காங்கே கனலைக் கக்குகிறது.
திராவிடர் கழக மகளிர் அணியும், பாசறையும் நாளை மறுநாள் (26.7.2023 புதன்) முற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்காதீர்கள்! மகளிரே, மான உணர்வுள்ள சகோதரிகளே வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வாருங்கள்.
26ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பீர்! பங்கேற்பீர்!
- மகளிர் அணி - மகளிர் பாசறை
No comments:
Post a Comment