சென்னை ஜூலை 15- ஓராண்டுக்கும் மேல் தாமதமாகும் பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிறந்த சில வாரங்களுக்குள்ளாகவோ அல்லது இறந்த சில வாரங்களுக்கு உள்ளாகவே பிறப்பு இறப்பு சான்றி தழ்களை நாம் வாங்கியாகவே வேண் டும். இல்லாவிட்டால் அதற்கு பெரும் சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. அப் படியான சூழல்களில் ஓராண்டுக்கும் மேல் தாமதமாகும் பிறப்பு, இறப்பை பதிவு செய்ய மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதை தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:
"பிறப்பு மற்றும் இறப்புக்கான பதிவை தாமதமாக செய்தால், அதற்காக நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற வேண்டியதிருந்தது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில், 2017-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதிக்கு பின்பு நீதிமன்றம் மூலம் பெறப்படும் ஆணைகள் செல்லாது என்று உயர்நீதி மன்றம் கூறியிருந்தது. அதன்படி அந்த தேதிக்கு பின்பு வருவாய் கோட்டாட் சியர் (ஆர்.டி.ஓ) மூலமாக பிறப்பு மற் றும் இறப்புக்கான பதிவை மேற் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக் கப்பட்டு உள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, பிறப்பு, இறப்பு பதிவில் தாமதம் ஏற்பட்டிருந்தால், அதை குறிப் பிட்டு பிறப்பு, இறப்பு நடந்த பகுதிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சிய ரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு பெற்ற நீதிமன்ற உத்தரவுடன் பதிவுக்காக விண்ணப்ப தாரர் வந்தால், பதிவுக்கான உத்தரவை எந்தவித விசாரணையும் இல்லாமல் வருவாய் கோட்டாட்சியர் பிறப்பிக் கலாம். அந்த விண்ணப்பத்துடன், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இல் லாததற்கான சான்றிதழை சம்பந்தப் பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் பெற்று இணைக்க வேண்டும். கிராம ஊராட்சியில் தாசில்தார் அல்லது கிராம நிர்வாக அலுவலர் (வி.எ.ஓ), பேரூராட்சியில் செயல் அலுவலர், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ஆணையர், கன்டோன்மென்ட் பகுதி யாக இருந்தால் செயல் அலுவலரிடம் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
இணைக்க வேண்டியது என்னென்ன?
வயது குறிப்பிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பள்ளி ஆசிரியரிடம் இருந்து பெறப் பட்ட பள்ளி ஆவண பதிவுகள் ஆகிய துணை ஆவணங்களை விண்ணப்பத் துடன் சமர்ப்பிக்கலாம். இந்த ஆவணங் கள் இல்லாவிட்டால், பிறந்த மருத்துவ மனையின் ஆவணங்களையோ அல் லது வீட்டில் பிறந்திருந்தால், அந்த வீட்டின் குடும்ப தலைவருக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் உறவினர்களில் ஒருவரிடம் இருந்து எழுத்து வடிவ கடிதத்தையோ பெற்று இணைக்க வேண்டும்.
இறப்பு பதிவுக்காக, இறந்தவர் மற் றும் அவரது துணையின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் மயானத்தில் பெறப்பட்ட அறிக்கை; மருத்துவமனையில் இறந்திருந்தால் அங்கு பெறப்பட்ட அறிக்கை, கொலை, தற்கொலை போன்ற அகால மரணம் நேரிட்டு இருந்தால் முதல் தகவல் அறிக்கை மற்றும் உடற்கூராய்வு அறிக்கை; வீட்டில் இறந்திருந்தால், அருகில் வசிக்கும் உறவினரின் கடிதம் ஆகியவற்றை இணைத்து விண்ணப் பிக்க வேண்டும்.
உண்மைத்தன்மையை ஆய்வு செய்வார்கள்
கோட்டாட்சியர் இந்த விவரங்களை ஆய்வு செய்து, கிராம நிர்வாக அலுவல ருக்கு அனுப்பி 2 வாரங்களுக்குள் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை அளித்த பிறகு, இந்த விவரங்களை உள்ளூர் செய்தித்தாளில் வெளியிடச் செய்து, ஆட்சேபனைகளை அறியலாம்.
கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவல்களை பெற்று, திருப்தியிருந்தால் 60 நாட்களுக் குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதற்காக தாமத கட்டண மாக ரூ.500 வசூலிக்க பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். சான்றிதழ்களில் தவறு இருந்தால், உரிய ஆவணங்களை சமர்ப் பித்து மாற்றிக்கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment