அலைபேசி எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் செய்திப் பரிமாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

அலைபேசி எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் செய்திப் பரிமாற்றம்

வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடி யாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறி முகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவி யானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, ஒளிப்படங்கள், காட்சிப் பதிவுகள், ஒளிப்பதிவுகள் மற்றும் அழைப்புகளை மேற் கொள்ள பயன் படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக் களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வரு கின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன் பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக் கம். அந்த வகையில் இந்த அம்சம் அறிமுகமாகி உள்ளது.

பயனர்கள் வாட்ஸ்அப்பில் மற்ற பயனர்களுக்கு செய்தி அனுப்ப அல்லது உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்ய அவர்களது எண்ணை தங்கள் அலைபேசியில் சேமிக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர்களை வாட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். இப்போது எண்களை சேமிக்காமல் நேரடியாக சாட் செய்ய முடியும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அய்ஓஎஸ் பயனர்களுக்கு படிப்படியாக பயன்பாட்டுக்கு கிடைக்கும் என வாட்ஸ்அப் மெசஞ்சர் மேம்பாடுகளை நுணுக்கமாக கவனித்து வரும் WABetaInfo  தெரிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் செயலியை அப்டேட் செய்வதன் மூலமாகவும் இதனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி?

பயனர்கள் வாட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்ய வேண்டும்.

நியூ சாட் பட்டனை ஓபன் செய்ய வேண்டும்.

அதில் சேர்ச் ஆப்ஷனில் (லென்ஸ் வடிவில் உள்ள பட்டன்) பயனர்கள் தாங்கள் தகவல் பரிமாற்றம் செய்ய விரும்பும் எண்ணை உள்ளிட வேண்டும்.

அதை செய்த பின்னர் அந்த எண்ணுக்கு பக்கத்தில் சாட் என ஆப்ஷன் வரும். அதன் மூலம் அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்.

No comments:

Post a Comment