நாகர்கோவில், ஜூலை 26- மக்களிடம் பகுத்தறிவு விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் கன்னியா குமரி மாவட்ட திரா விடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட் டது. பகுத்தறிவு விழிப் புணர்வுக்கான துண்ட றிக்கைகளை பொதுமக் களிடம் வழங்கி பரப்புரை செய்தனர்.
குமரி மாவட்ட கழகத் தோழர்கள் நாகர்கோ வில் வேப்பமூடு சந்திப்பு மற்றும் மாநகர பகுதிக ளில் நடந்த இந்த பரப் புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக காப் பாளர் ஞா. பிரான்சிஸ், கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெரு மாள், பொதுக்குழு உறுப் பினர் மா.மணி, மாவட்ட மகளிரணி தலைவர் சு.இந்திராமணி, திக மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட திராவிடர்கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் உட்பட பலரும் கலந்து கொண்ட னர் . தந்தை பெரியாரு டைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமு டன் வாங்கி படித்தனர்.
No comments:
Post a Comment