ராமேசுவரம்,ஜூலை 25 - ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இன்று (25.7.2023) அதிகாலையில், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் வேலு, நாகநாதன்(எ)தட்சிண மூர்த்தி என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படகில் இருந்த 9 மீனவர்களை கைது செய்தனர்.
மண்டபம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment