உரத்தநாடு, ஜூலை 6- உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூரில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வினை சிறப்பிக்கின்ற வகையில் "90ல் 80 அவர்தான் வீரமணி" என்ற தலைப்பில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கிழக்குப் பகுதி செயலாளர் துரை.தன்மானம் வரவேற்றார். மாவட்ட இளை ஞரணித் தலைவர் ரெ.சுப்ரமணி யன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர்
அ.அருணகிரி, ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செய லாளர் மாநல். பரமசிவம், ஒக்க நாடு கீழையூர் மா.அஞ்சம் மாள், தஞ்சை மாநகர அமைப் பாளர் செ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
திராவிடர் கழகத்தின் தலை மைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி தொடக்க உரையாற்றினார்.
கழகப் பேச்சாளர் வழக்கு ரைஞர் பூவை.புலிகேசி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதிப் போராட்டம் அகில இந்திய அளவில் வெற்றி பெற் றதை விளக்கி சிறப்புரையாற்றி னார்.
கூட்டத்தில் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ந. சுரேஷ் குமார், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரெ.பாரத், சித்திரைச் செல்வன், மாநில பெரியார் வீர விளையாட்டு கழகச் செயலாளர் நா.ராம கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்ராபதி, நகர செயலாளர் ரெ.ரஞ்சித் குமார் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் ஒன்றிய அமைப் பாளர் பு. செந்தில்குமார், நகர கழக துணைச் செயலாளர் ரா.ராவணன், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் ப.இ. பாலகிருஷ்ணன், பெரியார் நகர் இரா.மகேஸ்வரன், வெ. சக்திவேல், ஒக்கநாடு கீழையூர் மா .கவுதமன், கருவாக்குறிச்சி கழகத் தோழர் கோபால், ஒக்க நாடு மேலையூர் கிளை கழகத் தலைவர்அ.ராஜப்பா, கிளை கழகச் செயலாளர் நா.வீரத் தமிழன், செ.சாமிநாதன், கரு விழிக்காடு மாணவர் அணி தோழர் ரெ.இனியவன், கீழவன்னிப் பட்டு பெரியார் பிஞ்சு
செ.தருண் உள்ளிட்டோர் பங் கேற்று சிறப்பித்தனர்.
மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் க. மாரிமுத்து நன்றி கூறினார்.
No comments:
Post a Comment