80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு

சென்னை, ஜூலை 27 தமிழ்நாட்டில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்குத் தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. 

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே 80 கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. 

மேலும் மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வ கங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment