ஜூலை8இல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 6, 2023

ஜூலை8இல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி

திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டங்களில் முடிவு

திருவாரூர், ஜூலை 6- திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023அன்று மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையிலும் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், ஆகியோர் முன்னிலையிலும் மாநில மாநில இளைஞரணி துணை செயலாளர் நாத்திக.பொன்முடி கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக செயல் பாடுகளைப் பற்றியும் திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற வேண்டும் கழகம் இல்லாத ஊர்கள் இருக்கக்கூடாது அனைத்து ஊர்களிலும் கழக கொடி பறக்க வேண்டும் என்று தமிழர் தலைவரின் கட்டளைப்படி செயலாற்றுவோம் செயல்படுத்த வேண்டும் மற்றும் நமது மாவட் டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வரும் 8.7.2023இல் நூறு மாணவர்களுக்கு குறையாமல் நடத்த வேண்டும். 

நமது இயக்கம் திருவாரூர், திருவாரூர் ஒன் றியம், திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டி ஒன்றியம், நன்னிலம், நன்னிலம் ஒன்றியம், குடவாசல் ஒன்றியம், கொரடச்சேரி ஒன்றியம், பகுதிகளில் பலமாக உள்ளது. அனைத்து கிராமங் களிலும் கிளைக் கழகம் வைக்க வேண்டும் என்றும் கழகம் இல்லாத ஒன்றியம் முத்துப் பேட்டை விரைவில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும் என தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றி னார். இறுதியாக மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ் நன்றி கூறினார் நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் - சோழங்கநல்லூர்

6.6.2023 10.30 காலை மணியளவில் திரு வாரூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சோழங்கநல்லூர் வெள்ளை மாளிகை அரங்கில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் உ.கவுதமன் தலை மையில் மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் பி.ரெத்தினசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.சரசுவதி ஆகியோர் முன்னிலையில் திரு வாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் கூட்டத் தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி சிறப்புரையாற்றினார். நாற் பதுக்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் ஒன்றியம்

7.6.2023 மாலை 5 மணி அளவில் திருவாரூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் எம். ஜெயராமன் தலைமையிலும், மாநில விவசாய தொழிலாளரனி செயலாளர் க.வீரையன். மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராஜ், மாவட்ட விவசாய தொழிலாளரணி செய லாளர் பி.ரெத்தினசாமி இவர்கள் முன்னிலையி லும் திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் கலந்துரையாடல் நோக்கதை உரையாற்றிட. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத் திக பொன்முடி தெருமுனைப் பிரச்சார கூட் டத்தை பற்றியும் கழக செயல்பாடுகளை பற்றியும் உரையாற்றினார். 

இறுதியாக தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தமது உரையில் குடவாசல் ஒன்றியத்தில் மஞ்சக்குடியில் தந்தை பெரியார் சிலை, படிப்பகம் அமைவதைப் பற்றியும் கழக செயல்பாடுகள் பற்றியும் தெருமுனைப் பிரச் சாரக் கூட்டம் கிளைக் கழக கூட்டம் சிறப்பாக நடத்த வேண்டும் மஞ்சக்குடியில் அமைய உள்ள பெரியார் சிலை படிப்பகம் விரைவில் திறக்கப்படும் என்றும் உரையாற்றினார். இறுதி யாக ஒன்றிய செயலாளர் சி.அம்பேத்கர் நன்றி கூறினார்.

புதிய பொறுப்பாளராக குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் பொ.செல்வம் அவர்களை இக் கமிட்டியில் நியமிக்கப்பட்டார்

கொரடாச்சேரி ஒன்றியம்

10.06.2023 10.06.2023 காலை 10.30 மணியள வில் கொரடாச்சேரி ஒன்றிய கழக கலந்துரை யாடல் கூட்டம் பருத்தியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் தங்க. கலியபெருமாள் தலைமையிலும். மாநில விவசாய தொழிலாளரனி செயலாளர் க.வீரையன். மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ் முன்னாள் மாவட்ட தலைவர் மு.சரவணன், மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் பி.ரெத்தினசாமி ஆகியோர் முன்னி லையிலும் திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் கலந்துரையாடல் கூட்ட நோக்கத்தை எடுத்து உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி கழக செயற்பாடுகளைப் பற்றி கிராமப்புற பிரச்சார கூட்டம் கிளை கழகங்கள் அமைப்பது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாணவர்களை சேர்ப்பது பற்றி உரையாற்றினார். ஏராளமான கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியாக ஒன்றிய செயலாளர் பொ.ஏகாம் பரம் நன்றி கூறினார்.

திருத்துறைப்பூண்டி ஒன்றியம், 

நகரம்

11.06.2023 காலை 10:00 மணியளவில் திருத் துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ரெ.புகழேந்தி இல்லத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலை வர் ரெ.புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் வீ.மோகன், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத் தின் நோக்கத்தை எடுத்துரைத்து வருங்காலங் களில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒன் றிய நகரத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று விளக்கி பேசினார்கள்.

இக்கூட்டத்தில் ஒன்றிய, நகர புதிய பொறுப் பாளர்கள். நகரத் தலைவர் சு.சித்தாரத்தன், நகரச் செயலாளர் ப.நாகராஜ், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய செயலாளர் இரா.அறி வழகன், ஒன்றிய அமைப்பாளர் ந.செல்வம் ஆகி யோர் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர். ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் நன்றி கூறினார்.

நன்னிலம் ஒன்றியம், 

நகரம்

13.06.2023 மாலை 5 மணி அளவில் நன்னிலம் ஒன்றிய, நகர கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் க.கலிய பெருமாள் தலைமையிலும், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், ஒன்றியபகுத்தறிவாளர் கழக  தலைவர் ஆகியோர் முன்னிலையிலும் திரு வாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் கலந்துரை யாடல் நோக்கதை எடுத்து உரையாற்றினார்.. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி தெருமுனைப் பிரச்சார கூட் டத்தை பற்றியும் கழக செயல்பாடுகளை பற்றியும் உரையாற்றினார். இறுதியாக தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தமது உரை யில் திருவாரூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பெரியார் பயிற்சிப் பட்டறையில் மாண வர்கள் கலந்து கொள்வதைப் பற்றி தான் முக்கிய ஊர்களில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடத் துவது என்று பற்றியும் உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் இரா.தன்ராஜ் நன்றி கூறினார்.

திருவாரூர் நகரம்

14.06.2023 மாலை 5:00 மணியளவில் திருவாரூர் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர் மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம் நடைபெற்றது. நகர தலைவர் எஸ்.வீ.சுரேஷ் தலைமையில், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாநில பகுத்தறிவு ஆசிரியர் அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்ட துணை தலைவர் கி.அருன் காந்தி, கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செய லாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட தலைவர் வீ.மோகன், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்து வருங்காலங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒன்றிய நகரத்தில் தெருமுனைப் பிரச் சாரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று விளக்கி பேசினார்கள். நகர செயலாளர் ப.ஆறுமுகம் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment