சென்னை, ஜூலை 21 பள்ளிக் கரணை, மனோகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தா (வயது 70). கடந்த 17ஆம் தேதி காலை கோவிலுக்கு சென்றுவிட்டு, பள்ளிக்கரணை குளம் எதிரே சாலையைக் கடந்தார். அப்போது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த தீனா, (வயது 21) என்பவர் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் சாந்தா மூளைச் சாவு அடைந்து விட்டதாக மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து சாந்தாவின் நான்கு மகன்கள் மற்றும் உறவி னர்கள், அவரது உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க செய்ய முன் வந்தனர். அதே மருத்துவமனையில் சாந்தாவின் இரு கண்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை உறுப்பு கொடை செய்யப்பட்டன.
பள்ளி மாணவனின் உடல் உறுப்புகள் கொடை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் மகன் சாம்பசிவம் (வயது 13). இவர் அணுமந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14 அன்று பள்ளிக்குச் சென்று விட்டு மிதிவண்டியில் வீட்டிற்கு திரும்பி யுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாகனம் சாம்ப சிவம்மீது மோதியுள்ளது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாம்பசிவம் ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார்
இந்த நிலையில் சாம்பசிவம் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச் சாவு அடைந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலுறுப்பை கொடையாக அளித்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என மருத்துவர்கள் கூறியதையடுத்து அவரது பெற்றோர் தாமாக முன்வந்து மகனின் இதயம், கண், உள்ளிட்ட உடல் உறுப்புகளை கொடையாக அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment