ரூபாய் 67 கோடியில் செங்கை சிவம் பாலம் திரு.வி.க. நகர் தொகுதியில் முதலமைச்சர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

ரூபாய் 67 கோடியில் செங்கை சிவம் பாலம் திரு.வி.க. நகர் தொகுதியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, ஜூலை 2 சென்னை திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.7.2023) திறந்து வைத்து பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:- ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே இருந்த பழுதடைந்த பாலத்தை இடித்து அகற்றி விட்டு, ஓர் புதிய பாலத்தை அமைத்திட வேண்டும் என்று முடிவெடுத்து அதை யும் குறித்த காலத்தில் கட்டி முடித்தி ருக்கிறோம். இந்த பாலத்திற்கு யாரு டைய பெயரை சூட்டலாம் என்று ஒரு வினாவை என்னிடத்தில் கேட்டார்கள்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றி, மறைந்தாலும் நம்முடைய நெஞ்சமெல்லாம் இன்றைக்கும் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய செங்கை சிவத்தின் பெயரை சூட்டலாம் என்று நான் அப்போது சொன்னேன். நீங்கள் சென்னையை வலம் வந்து பார்த்தால், நீங்கள் பார்க்கக்கூடிய பெரும்பாலான பாலங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில்தான் உருவாக்கப்பட்டவை.

அண்ணா சாலையில் ஒரு காலத்தில் 'ஜெமினி சர்க்கிள்' என்று சொல்லக் கூடிய ஒரு இடம். அது இன்றைக்கு அண்ணா மேம்பாலம் என்று சொல் லக்கூடிய அளவிற்கு கலைஞர் மேம் பாலத்தை அந்த இடத்தில் உருவாக்கி, அண்ணா மேம்பாலம் என்று அதற்கு பெயர் சூட்டினார். இன்றோடு (நேற்று) அந்த பாலம் 50 ஆண்டு கால வரலாற்றை பெற்றிருக்கிறது. வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக 3,184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றைக்கு அந்தப் பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகளின் பயனாக, சென்ற ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்திலிருந்து எப்படி காப்பாற்றப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். முன்பெல்லாம், மழை பெய்தால், எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஓடிக் கொண்டி ருக்கும், வீட்டிற்குள் தண்ணீர் இருக்கும். மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று பத்திரப்படுத்துவோம். அங்கு சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவோம். இது ஒவ்வொரு மழைக்காலத்திலும் வழக்கமாக இருந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நிலையை மாற்றிய ஆட்சி தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. அந்த மழைநீர் வடிகால் பணிகள் இன்றைக்கு வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகள் மீதமிருக்கிறது. அந்தப் பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், அதையும் தாண்டி மெட்ரோ திட்டம் வேறு செயல்படுத்தப்பட்டிருக் கின்ற காரணத்தினால்தான் சில சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அந்த சாலைகளை மேற் கொள்ளப்படக்கூடிய பணிகள் எல் லாம் விரைவில் சரிசெய்ய வேண்டும், அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

சென்னை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பூங்காக்களை அழகு படுத்திட, அதை மேம்படுத்திட, கடந்த இரண்டு ஆண்டுகளில் 124 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்குமட்டுமில்லை, இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பல இடங்களில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல இடங்களில் எங்கெங்கு தேவைப் படுமோ அந்த இடங்களில் எல்லாம் பாலங்கள் உருவாகி இருக்கிறது. நம்முடைய அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடக்கத்தில் சொன்னது போல, உங்களுக்கு இந்த ஆட்சி ஒரு பாலமாக நன்மைகளை உருவாக்கித் தரக்கூடிய பாலமாக இந்த திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும். உங்கள் கடமையை நிறை வேற்ற இந்த ஆட்சிக்கு என்றைக்கும் துணை நிற்கவேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி னார்.  விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே.சேகர்பாபு, ஆர்.மேயர் பிரியா, பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கொளத்தூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.


No comments:

Post a Comment