விருத்தாசலம்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் 60 திராவிட நாற்றுகள் பயன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

விருத்தாசலம்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் 60 திராவிட நாற்றுகள் பயன்

விருத்தாசலம், ஜுலை 2 - விருத்தாசலம் கழக மாவட்டத்தின் கடைக் கோடி பகுதி கல்லூர்.  இயற்கை வளத்திலும் - பொரு ளாதார வளர்ச்சியிலும் பின் தங்கிய பகுதி. இப்பகுதியில் ஜூன் 25ஆம் தேதி சரஸ்வதி அறிவாலயம் மேல்நிலைப் பள் ளியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. 

 இப் பட்டறையில் 60 இரு பால்மாணவர்கள் பங்கேற்ற னர். இதில், 32 பேர் உயர்நிலைப் பள்ளியிசம், 22 மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயில்கின்றனர்.6 மாணவர்கள் பட்டம் பெற்றவர்களாவர்.

 பெரியார் பண்ணையில் 60 திராவிட நாற்றுகளை சிறப் பாக உருவாக்கிடும் வகையில்,

1.சாமி ஆடுதல் பேய் ஆடுதல் அறிவியல் விளக்கம். 2.சமூகநீதி வரலாறு. 3.தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள். 4. சமூக ஊடகங்களில் நமது பங்கு. 5.தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனை. 6. பார்ப்பன பண்பாட்டுப் படை யெடுப்பு எனும் 6 தலைப்புகளில் காலை 10:30 மணியில் இருந்து பயிற்சி வகுப்புகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

 சாமி ஆடுதல் பேய் ஆடுதல் அறிவியல் விளக்கம் என்னும் தலைப்பில் வகுப்பினை மருத் துவர் இரா.கவுதமன் சிறப்பாக எடுத்தார். அப்போது, சாமி ஆடுதல் - பேய் ஆடுதல் போன் றவை யார் யாருக்கெல்லாம் வருகிறது என்றும். அது எத னால் ஏற்படுகிறது என்பதை யும் தெளிவாக விளக்கினார்.

 இதனையடுத்து திராவிடர் கழக செயலவை தலைவர் சு. அறிவுக்கரசு சமூகநீதி வரலாறு எனும் தலைப்பில் வகுப்பினை எடுத்தார். அப்போது சமூக நீதிக்காகப் பாடுபட்ட தலை வர்களைப் பற்றியும், சமூக நீதி இன்மையால் ஏற்பட்ட இழப் புகள் குறித்தும்,சமூக நீதிக்கான தேவைகள் குறித்தும் மாணவ ரிடம் உரையாற்றினார்.

  தேநீர் இடைவேளைக்குப் பின் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி  தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் எனும் தலைப்பில்  திரைக்காட்சி வாயிலாக வகுப்பெடுத்தார்.  அப்போது, பெண்கள் பட்ட இடர்பாடுகள் குறித்தும், தந்தை பெரியார் பெண்ணுரி மைக்காக போராடிய விதங்கள் குறித்தும், தந்தை பெரியாரின் போராட்டத்தால் பெண்கள் அடைந்த உரிமைகள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

சமூக ஊடகங்களில் நமது பங்கு என்னும் தலைப்பில் வி.சி.வில்வம் வகுப்பெடுத்தார். அப்போது தொழில் நுட் பத்தை நாம் எவ்வாறு பயன் படுத்துவது என்பது குறித்து விளக்கமாக மாணவர்களி டையே தெரிவித்தார்.

முனைவர் க.அன்பழகன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள் எனும் தலைப்பில் வகுப் பெடுத்தார். அப்போது, மாணவர்களிடையே கடலூரில் பிறந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் சமுதாய பணியையும் - தொண் டையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

நிறைவாக பார்ப்பன பண் பாட்டு படை எடுப்பு எனும் தலைப்பில் சு.அறிவுக்கரசு வகுப்பெடுத்தார். அதில், பார்ப் பனர்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்தார்கள் என்பதையும் வந் தேறிகளான ஆரிய பார்ப்பனர் களால் நாம் எவ்வாறு இன்னல் களுக்கு ஆளானோம் என்பது பற்றியும் தெளிவாக விளக்கி கூறினார்.

நிறைவு விழா

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நிறைவு விழா நடைபெற்றது.

பயிற்சி பட்டறையில் சிறப் பாக குறிப்பு எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்கு புத் தகங்கள் வழங்கப்பட்டன. சரஸ்வதி அறிவாலயம் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர் கொ.சரண் முதல் பரிசையும், வினா யக நந்தல் கிராமத்தைச் சேர்ந்த இரா.அபிநயா இரண்டாம் பரிசையும், கல்லூர் கிராமத் தைச் சேர்ந்த மாணவி பா. புணஷ்பாசரன் மூன்றாம் பரி சையும் பெற்றனர். 

இம்மாணவர்களுக்கு ரூ. 1000 மதிப்பிலான புத்தகங் களை மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் வழங்கினார். 

பயிற்சி  வகுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழுடன் ரூ. 1000 மதிப் பிலான புத்தகங்களை மாவட்ட அமைப்பாளர் புலவர் வை. இளவரசன் வழங்கினார்.

 நிகழ்ச்சியை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பா ளரும், மாநில ஒருங்கிணைப்பா ளருமான இரா.ஜெயக்குமார் சிறப்பாக நெறிப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர்  ப.வெற்றிச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் வை. இளவர சன், மாநில இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலு, மாவட்ட துணைத் தலைவர் அ. பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் த. சேகர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பி. பழனிச்சாமி, வேப்பூர் வட்டாரச் செயலா ளர் ம.இளங்கோவன், பெண் ணாடம் நகரச் செயலாளர் அ. பச்சமுத்து, பொதுக்குழு உறுப் பினர் தங்க.ராஜமாணிக்கம், விருத்தாசலம் நகரச் செயலா ளர் மு.முகமது பஷீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சே.பெரியார்மணி, விருத்தாச லம் ஒன்றிய அமைப்பாளர் செ.இராமராஜ், மாவட்ட மக ளிரணி தலைவர் லட்சுமி உள் பட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்பை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட துணைத் தலைவர் அ.பன்னீர் செல்வம், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் வெங்கட.இராசா, மேடை மற்றும் ஒலி - ஒளி ஏற்பாடு செய்த மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சே.பெரியார்மணி ஆகியோ ருக்கு மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார் பய னாடை அணிவித்துப் பாராட் டினார்.

நிறைவாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட .இராசா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment